நம்மிடம் பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். அவன் விடுவது முதலைக் கண்ணீர் என்று?
அப்படின்னா!
போலியான கண்ணீர்!
பாசாங்கு வேடம் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
போலி, வேடம் என்பதே இதன் விளக்கமாக ஏற்றுக் கொள்ளலாம்.
இதில் ஒரு அறிவியல் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அப்படின்னா முதலை இங்கு எப்படி வந்தது?
கேட்பது புரிகிறது.
‘முதலைக் கண்ணீர்’ என்ற சொல், மோசமான வஞ்சகத்தை விளக்க கையாளபட்ட சொற்றொடரே!,
கடலில் வாழும் ஆமைகள், பாம்புகள் போன்ற ஊர்வனங்கள் கடல் நீரிலேயே வாழ்வதாலும், உப்பு அடர்த்தி உள்ள நீரானது , உணவாகவும் நீராகவும் செல்லுகிறது. இதை அவை எப்படி வெளியேற்றும் என்று நினைக்கிறீர்கள். கண்ணீரித்துளி வழியாகவே வெளியேற்றுகிறது.
ஆம்…
இந்த முதலைக் கண்ணீரின் புதிர் முதலை தானுண்ட உணவிலும் தண்ணீரிலும் உள்ள, தேவைக்கு அதிகமான உப்புக்களை கண்ணீராக வெளியேற்றுகிறது என்பதே உண்மை.
முதலைக்கண்ணீர் உண்மையள்ள என்ற சொற்றொடரே அறிவியலாக நம் பழக்கத்தில் உள்ளது.

1 comment:
Nice
Post a Comment