சாதியமைப்பில் பெண்ணடிமைத்தனம்-அண்ணல் அம்பேத்கர்


(தலித்தியமும் தமிழ்த் தேசியமும்- என்ற தமிழ் தமிழர் இயக்க வெளியீட்டில் தியாகு)
சான்றாக ஒன்றைச் சொன்னால், சாதியமைப்பில் பெண்ணடிமைத்தனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அம்பேத்கர் விளக்கிக் காட்டினார். உடன்கட்டை என்னும் பெண் கொலைக்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள தொடர்பை அவர் வெளிப்படுத்தினார். இராசபுத்திரர்கள் படைச்சாதியினர்,போரில் ஈடுபடும் ஆண்கள் இறந்து போவதால் ஆண்-பெண் விகிதம் மாறுகிறது.
ஆண்களை காட்டிலும் பெண்கள் கூடுதலாகி விடுவதால் இயல்பாகவே சாதிக்கு வெளியே உறவு தேடும் நெருக்குதல் தடுப்பதற்காகத்தான் இயன்ற வரை பெண்கள் எண்ணிக்கையைக் குறைக்க உடன்கட்டைப் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அகமண முறையைப் பாதுகாப்பதும் இவ்விதம் சாதியமைப்பை நிலைநிறுத்துமே உடன்கட்டைக் கொடுமையின் நோக்கம் என்பதை அம்பேத்கர் நிறுவினார்.

No comments:

Post a Comment