ஓராண்டாகப் போகிறது. முள்ளிவாய்காளின் ஓலங்கள் முடிந்த பாடில்லை. வெற்றி விழா கொண்டாட்டங்கள் இலங்கை தீவின் முழுவதும் சிங்கள பேரிணவாத அரசு கொண்டாடி வருகிறது. சுமார் இரண்டு இலட்சம் பேர் வீடிழந்து திறந்த வெளிச்சிறையில் உள்ளார்கள்.
இக்கொண்டாட்டங்களின் மூலமே அன்னை சோனியா தான். கணவனை இழந்த துயரத்திற்கு சுமார் 50,000 கைம்பெண்களை உருவாக்கியுள்ளார். ஆம் தன் தாலிக்கு பதிலாக ஒரு இனத்தை பலியிட்டுள்ளார். நோக்கம் பிரபாகரனை கொல்லவேண்டும். புலிகளின் அமைப்பை அழிக்க வேண்டும். திட்டமிட்டு காரியதத்தை முடித்துள்ளார்கள். இன்றும் பதறுகிறது. இதயம் துடிக்கிறது. உண்மையில் கொண்டாட்டம் சோனியாவுக்குத்தான். நல்ல நாடகத்தை காட்சி வாரியாக அறங்கேற்றியது ஒப்பனை செய்தது சோனியாவின் குடும்பம் தான். கதாபாத்திரங்கள் இராஜக்பக்சே, நாராயணன், மேனன், கேரள அந்தோனி, செட்டிநாடு சிதம்பரம், கலைஞர், இந்து ராம்…. இத்தியாதிகள்.
நளினியின் மீது கரிசனமும் ஓனாயின் பாசமும்
நளினியின் தூக்கு தண்டனையை தாய்மை பாசத்தோடு நீக்க பரிந்துரைத்து என்னைப் போன்ற ஏமாளித்தமிழர்களை நம்ப வைத்தார். அந்த தாயின் கபட நாடகத்தில் ஈழ மக்களை சிதைத்தார். தன் கணவனின் படுகொலைக்கு ஒரு இனத்தை சாகடித்தை தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் துணையோடு, குறிப்பாக திமுக அரசின் ஆசிர்வாதத்தோடு படுகொலையை நிகழ்த்தி வெற்றிக் கொண்டது காங்கிரஸ்.
அதற்கு அச்சாரமாக நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றியும் கொண்டது. கொழும்பில் கொண்டாடும் வெற்றிக்களியாட்டங்கள் அனைத்தும் சோனியாவின் உபயம் தான். ஒரே நோக்கத்திற்காக ஓர் இனம் சித்தைக்கப்பட்டுள்ளது.
சீனப்பாசம்-இந்திய நேசம்
ஒன்றை மட்டும் சரியாக செய்தார்கள். போரை இலங்கை நடத்துவதாக மாயையை மட்டும் உலகப் பார்வைக்கு கொண்டுச் சென்றார்கள். தெற்காசிய பேட்டை ரௌடியாக உருபெற்றுவரும் இந்திய வல்லாதிக்க அரசின் அதிகாரத்திற்கு மாற்றாக சீன அரசு தன் பங்கிற்கு அதி நவீன ஆயுதங்களை கொடுத்தது படுகொலைக்கு சகல உதவிகளையும் செய்தது. இப்போக்கு இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்றாலும் பிரபாகரன் என்ற மனிதனை கொல்ல சீன ஆக்கிரமிப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டது இந்திய அரசு.
தொங்கு அரசை நிலை நிறுத்த தமிழினத்தை பலிக்கொடுக்க தன் பங்கிற்கு உண்ணாவிரத நாடகத்தைக்கூட ஏமாளித்தமிழர்கள் நம்புவார்கள் என்று போர் நிறுத்த?! அறிவிப்பைப் பெற்றார்.
இந்திய அரசு தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை தமிழர்கள் உணராதவரை சோனியாவின் தமிழ்ப்பாசத்தில் ஈழம் அழிந்து கொண்டுதான் இருக்கும்.
மருத்துவத்தை மறுத்த பார்வதியம்மாளின்
மருத்துவம் மறுக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் இலங்கைச் சென்றுள்ளார். சரியாக முடிவெடுத்துள்ளார். விலைப்போகும் தமிழகத்தலைவர்களின் அனுமதி மறுப்பு பிறகு நிபந்தனைகளுடன் கொடுக்க முனைந்த மருத்துவத்தை பார்வதியம்மாள் மறுத்துள்ளதை நாம் வெட்கித் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதிலும் சோனியாவின் பங்கை சொல்லாமலே தெறிந்து கொள்ளலாம்.
வழக்கம் போல ஓட்டு அரசியலில் தமிழர்கள் இன உரிமையை மறப்பவர்கள் என்ற நிலை போகுமோ அன்று வரை இரவல் சோனியாவை தாய்யென்று போற்றுவான் தமிழன், சொந்தத்தாய் பார்வதியம்மாளை மறுப்பான்.


No comments:
Post a Comment