விளாடிமீர் இலியிச் இது தான் தோழர் லெனின் அவர்களின் முழுப்பெயர். ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை மூச்சுக்கு விடுதலை கொடுத்தவன். மேதை மார்க்சின் த்த்திவத்திற்கு செயல் வடிவம் கொடுத்தவன். போல்சுவிக் கட்சியின் அதிகாரம் அது பாட்டளிகளின் அதிகாரம் என்றவன். தேசிய இன்ங்களின் தன்னுரிமைக்கு விலாசத்தைக் கொடுத்தவன்.
தமிழ்த்தேசியம் என்றாலே பிரிவினை என்று பிதற்றும் இந்திய மார்க்சிஸ்டுகளுக்கு தோழர் லெனின் அவர்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப்பற்றி கோட்பாட்டை மறந்திருப்பார்கள் அல்லது இங்கு பொருந்தாது எனக் கூறுவார்கள். இக்கோட்பாடுதான் சோவியத் ஒன்றியத்தை கட்டமைத்துக் கொடுத்தது.
தோழர் லெனின் பேசும் காணொலிக்கட்சி இது.
பிறகு. தோழன் சே.
ஆயத்த ஆடைமுதல் அனைத்து விளம்பரம் மற்றும் ஊடக விளம்பரங்களில் சே வருகிறார். பொலிவியாவின் வெளிச்சம் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை அச்சப்படவைத்தது. எழுச்சியின் அடையாளம். கிளர்ச்சியின் உயிர்ப்பு. ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு வடிவமே சே. ஆம் கியுபா விடுதலைக்குப் பிறகு மக்கள் அரசு அவருக்கு அமைச்சர் பதவியை தருகிறார்கள். என்ன செய்கிறார் சே. தினமும் குறிப்பிட்ட நேரம் பாட்டாளிகளுடன் உழைக்கிறார். உழவர்களுடன் சென்று கரும்பு வெட்டி இருக்கிறார். இக்காட்சியில் தொழிலாளர்களுடன் ஒரு தொழிற்ச்சாலையில் மூட்டை தூக்கிப்போடுகிறார்.
இன்று ஒரு வட்டச்செயலாளர், கிளைச்செயலாளர் எப்படி இருக்கிறார்.???????
இது தான் சேகுவேராவை தனித்துக் காட்டுகிறது.
No comments:
Post a Comment