சட்டசபையில் அறிவிப்பு:
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அறிவித்துள்ளது என்று சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
அவர் மேலும், ‘’பார்வதி அம்மாள் மீதான தடையை நீக்கி, அவர் தமிழகம் வந்து சிகிச்சை பெற 6 மாதம் விசா தர முன் வந்துள்ளது மத்திய அரசு. ஆனால் அவர் மருத்துவமனியில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்கக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது’’என்று அறிவித்தார்.
போதுமா நிபந்தனை?
ஏன் அரசியல் கட்சியினருக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும்?
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியருக்கும் கூட தடை விதிக்கலாமே ? நாம் கூற
மேற்கண்ட பரிந்துறை அனுப்பப்பட்டுள்ளதாக கலைஞர் அறிவித்தாலும் அறிவிப்பார்.
தனது உண்ணாவிரதத்தினால் ஈழத்தில் போர் ஓய்ந்தது என்று சொன்னவர் தானே தமிழினத் தலைவர் கலைஞர்.
நாளை இப்படியும் அறிவிப்பு வரலாம்
அன்னையர் தின விழாவின் பரிசு இது..
.பார்வதி அம்மாளின் நலனுக்குத்தான் என்று தோழர்கள் திருமா, சுபவியும் வரவேற்கலாம்.

No comments:
Post a Comment