இன்று உழைப்பாளர் தின விழாவில்....


உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த தோழர்களின் நினைவாக, வென்றெடுக்க வேண்டிய உரிமைகளுக்காக போராட்ட வேண்டிய உழைக்கும் மக்களின் அணிவகுப்பாக காஞ்சிபுரத்தில் அனைத்து அமைப்புகளின் சார்பில் மேதின  எழுச்சிப் பேரணி நடைப் பெற்றது.


















தோழர் டி.ஏ.ஜி. அசோகன், திராவிடர் கழக மாவட்டத்தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. பறை இசையுடன் எழுச்சி ஊர்வலம் துவங்கியது.
தோழர்கள் நடராசன்,தமிழினியன்,காஞ்சி அமூதன்,பொன்னப்பன், இரவி, குறள் அமிழ்தன், ஜானகிராமன் போன்றோர் பேரணியை வழி நடத்தி சென்றார்கள்.
 உழைக்கும் பெண்கள்  பலர் ஆர்வத்தோடு பங்கெடுத்தனர். பேரணி துவங்கிபோதும் தந்தை பெரியாரின் சிலைக்கு பெண்கள் மாலை அணிவித்தும், முடியும் போதும் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிட்டதும் சிறப்பு,.
நிகழ்சியில் முற்போக்கு சமூக நீதிப்பேரவையின் நிறுவனர் டாக்டர் விமுனா மூர்த்தி சிறப்புரையாற்றினார்.
நன்றி தோழியர் பச்சையம்மாள் கூற பேரணி முடிந்த்து.
இப்பதிவில் பேரணியில் இசைக்கலைஞர்களின் விடியோவும், டாக்டர் விமுனாமூர்த்தியின் முழக்கத்தின் சிறு பகுதியின் வீடியோவையும் இணைத்துள்ளேன். 

No comments:

Post a Comment