கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலினா? அழகிரியா?



திமுகவில் சலசலப்பு..
முக அழகிரி ஒரு நேர்காணலில் “தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் “ என்றார்.
கலைஞர் பார்த்துக் கொள்வார் என்கிறார் ஸ்டாலின்.
வைகோ விவகாரத்தில் அப்போது கலைஞர் சொன்னது , திமுக ஒரு ஜனநாயக கட்சி. அனைத்து மட்டங்களிலும் தேர்தல் மூலம் தான் பிரதிநிதிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொதுக்குழு, அரசியல் உயர்மட்டக்குழு என்ற பல குழுக்கள் முடிவு செய்யும் என்று அறிவிப்பார்.
எந்தவொரு திமுக உறுப்பினரும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று  சட்டவிதி இருக்கையில் அழகிரியின் அறிவிப்பில் என்ன அதிர்வு ஏற்பட்டு விட்டது.

இந்த விவாதம் கூட உண்மைதானா? என்ற சந்தேகம் கூட வருகிறது.
எப்படியோ ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு உரிமையுள்ளதோ அதே அளவுக்கு அழகிரிக்கும் உரிமை இருக்கும்.
ஏற்கனவே ஒரு பேச்சு வட தமிழ்நாடு அவருக்கு தென் தமிழ்நாடு இவருக்கு என்று பரவலாக உள்ளது . மேலும் இக்கருத்தை வலுப்படுத்தும் விதமாக  இருவரும் தங்களுக்கு விசுவாசியான மாவட்டச்செயலாளர், அமைச்சர் என்று  பிரிவுகளாகவே இயங்கி வருகின்றனர்.
ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்ற தோற்றமே, அழகிரியின் இப்பேச்சு குளத்தில் எரிந்த கல்லாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எப்படியே திமுகட்சியில் இருவரில் ஒருவரே தலைவராகப் போகிறார். திமுக கட்சியில் இருக்கும் சுப்பனோ குப்பனுக்கோ இப்பதவி கிடைக்கப்போவதில்லை.
அதுவும் கலைஞரின் குடும்ப உறுப்பினருக்கே கிடைக்கப்போகிறது என்பதான் உண்மை.

5 comments:

bandhu said...

ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சொத்து தகராறில் தலையிட நமக்கென்ன உரிமை இருக்கிறது?

அஞ்சான் said...

@Ravi

குடும்பத் தகராறு என்றால் நாம் ஏன் பேசப்போகிறோம். தலைவர் பதவி என்றால் அதிகாரம். அதுவும் தமிழக ஆட்சியதிகாரத்தை நோக்கிய மோதலே அது. நன்றி ரவி .

நாடோடித்தோழன் said...

அழகிரியை விட ஸ்டாலினே சிறந்த தலைவராக இருப்பார் என்பது எனது எண்ணம்...
இன்றைய தலைமுறை நமக்கென்ன இருபதால் தான் குடும்ப ஆட்சியை அனுபவிக்கிறோம்..
ரவியின் கருத்தை பார்த்தால் வருங்கால தலைமுறையும் அனுபவிக்க வேண்டும் போலிருக்கிறது..

என்னுடைய சில எண்ணச் சிதறல்களை காண உங்களை அழைக்கின்றேன்..
http://karuthuchidharal.blogspot.com

சவுக்கு said...

நண்பர் ரவி அவர்களே, இதை குடும்பத்துக்குள் நடக்கும் சொத்துக் தகராறாக பார்க்க முடியாது. இவர்கள் தமிழ்நாட்டையும், அதன் மக்களையும் தங்கள் சொத்தாகக் கருதி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

Anonymous said...

vinai vithaithavan vinaiyai arruppaan

Post a Comment