இடுபாடுகளில் நசுங்கும் அகிம்சை....




அன்பு திலீபா...
மீண்டும் மீண்டும்
உறுதிபடுத்துகிறார்கள்...
அகிம்சை கழிப்பறையில் துடைத்துப்போடும்
காகிதம் என்று...





முன்பு
காந்தியின் தேசம்...
அமைதியின் பெயரால்..
உன்னை சாகடித்து
உன் குருதி கொண்டு
அகிம்சையின் அகராதியை
மாற்றி எழுதியது...


இதே காந்தியின் தேசத்தின்
தூதரகம் திறக்க
உன் நினைவுத்தூண் இடிக்கப்படுகிறது.


மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்துகிறார்கள்
அகிம்சை கழிப்பறையில் துடைத்துப்போடும்
காகிதம் என்று...


2 comments:

மதுரை சரவணன் said...

ஆம் . அகிம்சை இன்று இம்சையைத் தான் தரும். நல்ல நினைவுகள்

அஞ்சான் said...

@Madurai Saravanan
ஏகாதிபத்தியவாதிகள் என்றும் அகிம்சையை நம்பியது இல்லை. உதைபடுபவனுக்கும், அடிமைக்கும் அகிம்சையை கடைபிடிக்க வலியுறுத்துவார்கள். போதிப்பார்கள். நன்றி சரவணன்.

Post a Comment