நான் பொதுவான ஆள்.
யாருக்கும் சார்பானவன் அல்ல..
எந்தக்கட்சியும் சார்பானவன் அல்ல..
வீட்டிலேயும் நான் யார்பக்கமும் இல்லை...
பணியிடத்திலும் யார் பக்கம் ?
பாஸ் பக்கமா ? சக ஊழியர் பக்கமா?
அப்படியானால் நடு நிலை சரியா ?
பல பதிவர்களும் எழுதுகிறார்கள்?
என் எழுத்தில் எந்த நோக்கமும் கிடையாது , எதோ எழுத தோனிற்று, அரிப்புக்காகவே எழுதுகிறேன் என்கிறார்கள். சமூகமாவது சேவையாவது என்று உச்ச நிலையில் கத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படியானால் நடுநிலைமை சாத்தியமா? சாத்தியப்படுமா?
நடுநிலையான செய்திகள் சாத்தியமா?
ஒவ்வொரு இதழுக்கும் ஒரு நோக்கத்துடன் கூடிய வியாபாரம், பணம் இது தான் இலக்கு.
எத்தனை செய்தி ஊடகங்கள்அழித்தொழிக்கப்பட்ட ஈழப்படுகொலையை காட்டின, சொல்லின?
இங்கே என்ன நடுநிலை ?
சிங்களவன் சொல்லும் செய்திகளை வெளியிட்ட நடுநிலை நாளிதழ்கள் இருக்கத்தான் செய்கிறது.
அநீதியா ? நீதியா ? எந்தபக்கம் இருக்கப்போகிறீர்கள் ?
நடுநிலைமையா ?
இங்கு நடுநிலைமை என்ற தந்திரச் சொல்லும் அநீதிபக்கமே இருக்கச் சொல்லுகிறது.
உங்கள் பணியிடத்தில் உங்களைத்தவிர பலரை வீடுக்கு அனுப்புகிறது எனவைத்துக் கொள்வோம், நீங்கள் யார் பக்கம்? உங்களை போராட்டத்திற்கு எல்லாம் கூப்பிடவில்லை? கருத்தியலாக யார்பக்கம் ?
நான் பாஸ் பக்கமும் இல்லை, பக்கத்து இருக்கைக்காரன் பக்கமும் இல்லை என்ற கூற்று சரியா ?
- ·
எந்த நோக்கமும் என் எழுத்துக்கு இல்லை என்று கூறுபவர்கள் ? வீட்டில் எழுதி எழுதி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே , இணைய பக்கத்தில் ஏன் எழுதவேண்டும். சூப்பர் ஹிட் எனது பிலாக் கொடுக்க வேண்டும் என்று கண்டமேணிக்கு ஏன் எழுத வேண்டும்.
·
அந்தபக்கமா ? இந்தபக்கமா?... இல்லை நான் மதில் மேல் பூனைப்போல இருப்பேன் ... இது அபத்தம் இல்லையா ?
- ·
காலில் காலனிக்கூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் இந்த சமூகத்தில், அரசு மேலை நாடுகளின் பல்கலைகழகங்களை கொண்டு வர முயற்சி செய்கிறது ?
இங்கு வந்துவிட்டால் நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று பறக்கத்தேவையில்லை.
யார்பக்கம் இருக்கப்போகீறீர்கள் ?
- ·
வீட்டில் கிலோ கணக்கில் சவரன் கொண்டுவந்து அம்மாவின் கொடுமையால் மௌனமாய் கண்ணீர்விடும் மனைவியின் பக்கமா? பெற்றெடுத்த அம்மாவின் பக்கமா?
- ·
நடுநிலைமை ? சரியா,,சாத்தியமா ?.
யார்பக்கம் இருக்கப்போகீறீர்கள் ?
4 comments:
ஆஹா.. பிரச்சனைய கிளப்ப பார்க்கறீங்களே?
நியாயம் எந்த பக்கமோ அந்த பக்கம்.
நல்ல அலசல்.
ஆனால் சில நேரங்களில் மௌனமாக இருந்து விடுவது பிரச்சனையை விரைவாக தீர்த்துவைக்கும்.
@கவிதை காதலன்
பிரச்சனை இல்லை தோழரே. இப்படி பலர் நழுவல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்றப்படி ஒரு ஆரோக்கிய விவாதப்பொருளாக ஆக்கவே முயற்சித்தேன்.
அக்பருக்கும் எனது நன்றிகள்.
Survival of the fittest! Thats human! Thats the reason we both alive! hahaha..
Post a Comment