இதே நாளில் தான் ,1931,மார்ச் 23-இல் ,விடுதலைப்போராட்ட இயக்கத்தின் முன்னணிப் புரட்சியாளர்களாகிய மாவீரர்கள் பகத் சிங்,சுகதேவ்,ராஜகுரு ஆகியோர் தூக்கிலடப்பட்டனர்.
எதற்காகப் போராடினார்களோ அதே சூழல் இப்போதும் உள்ளது. அதிகாரம் மாறியுள்ளது. ஆட்சியாளர்கள் மாறியுள்ளார்கள். ஆதிக்கவாதிகளை எதிர்த்து போராட இம்மாவீரர்களை நினைவு கூறுவோம்.
தோழர் மார்க்ஸ் கூறுவார் , மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச்சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காக செய்யப்படுகின்ற தியாகம்.

2 comments:
எமது தாய்த்தமிழீழ தேசத்தின் மாவீரர்களையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்....
@viduthalai
கூண்டுப் பறவை
சிறகு விரிக்கும்!
குனிந்த முகங்கள்
நிமிர்ந்து சிரிக்கும்!
மாண்ட வீரர்
கனவு பலிக்கும்!
மகிழ்ச்சிக்கடலில்
தமிழ்மண் குளிக்கும் !
தமிழீழ விடுதலை மாவீரர்களின்
குருதியில் எழும்.
வாழ்த்துக்கள். விடுதலை!
Post a Comment