சென்னையில் 2010 மார்ச்சு 21 அன்று பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற நூலின் இரண்டாம் பதிப்பு தமிழக முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. பெரியார் ஈ.வே.ரா இராமசாமி நாகம்மையார் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தோழர் வே. ஆனைமுத்து தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நூல் வெளியீட்டுவிழா நடைப் பெற்றது.
9300 பக்கங்களைக் கொண்ட 20 தொகுதிகள் வெளியிடப்பட்டது. மார்க்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக்கட்சியின் செயலர் தோழர் ஆனைமுத்து அவர்களின் கடும் உழைப்பால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தந்தைப் பெரியாரின் பன்முக ஆளுமைகளை புத்தகவடிவத்தில் வந்துள்ள அறிவுக் கருவூலமே இந்நூல் தொகுப்பு.
தமிழகத்தின் பல பலபகுதிகளில் இருந்து பல அமைப்புத் தோழர்கள் கலந்து கொண்டார்கள். அரங்கமே நிரம்பி வழிந்தது.
தோழர் ஆனைமுத்து தனது தலைமையுறையில் “ தமிழக மற்றும் இந்திய அரசியலில் சமூக மாற்றத்திற்காக பாடுப்பட்ட தலைவர்களின் வரலாற்றை பள்ளி மற்றும் கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையினை வைத்தார்.
இந்து மத கருத்தியலை பரப்பும் முகமாக பாஜக மற்றும் நரேந்திர மோடி வகையராக்கள் வரலாற்றை மாற்றும் முயற்சியாக பாட்த்திட்டத்தில் இந்துத்துவ கருத்தியலை சேர்த்தது நினைவிருக்கலாம்.
இப்போது உள்ள தலைமுறைக்கு தங்களின் சொந்த வரலாற்றை அறியாமல் கல்வி பயிலும் அவல நிலையுள்ளது. உழைக்கும் மக்களுக்காக போராடிய, பாடுபட்ட தலைவர்களை கல்வித்திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். சமூக இழிவுகளை களைய பாடுபட்ட தலைவர்களான தந்தைப்பெரியார்,காமராசர், சிஞ்காரவேலர்,ரெட்டைமலை சீணிவாசன்,அண்ணல் அம்பேத்கர் பற்றிய பாடங்களை துணைப்பாடங்களாக அறிவிக்க வேண்டும் என்ற ஆனைமுத்துவின் கோரிக்கையை செயல்படுத்தப்பட வேண்டும்.
உழைக்கும் மக்களான,தாழ்த்தப்பட்ட,மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக பாடுப்பட்ட தலைவர்களைப் பற்றி இப்போதைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், படிக்க வேண்டும் என்ற கோரிக்கையே அடிப்படையானது. உடன் தமிழக முதல்வர் அவர்கள் இக்கோரிக்கையை உடன் பரிசீலிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கையும் கூட.


No comments:
Post a Comment