பார்ப்பனியப் பாம்பால் விழுங்கப்படும் மாயாவதி.



இந்திய ஊடகங்களால் மாயாவதியைப்பற்றியே பேச்சு. விவாதங்கள். நாடாளுமன்றத்தில் அமளி. காங்கிரஸ், பாஜக சேர்ந்து கூச்சல்.
ஆம்.
மாயாவதிக்கு எதிராக... அவரின் பிறந்த நாள் விழா பல கோடி ரூபாய்ச் செலவில் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு. அவருக்கு வழங்கப்பட்ட ஆளுயர “பண மாலை” ( அதை பண மலை என்றுக் கூட அழைக்கலாம்). பல ஆயிரம்  ரூபாய் நோட்டுகளால் ஆன மாலை பல கோடி ஆகும் என்கிறார்கள்.

மீண்டும் இரண்டாவது மாலையும் போடப்பட்டதாக ஊடகங்களில் விவாதங்களில் பேசுகிறார்கள்.
ஏன் மாயாவதி மட்டும் அப்படி விமர்ச்சிக்கப்படுகிறார்?.
அவர் ஒரு தலித். அதுவும் பெண். இந்தியாவின் பெரிய மாநிலத்தின் முதல்வர். காங்கிரஸ் பாஜவுக்கு பே பே காட்டிவிட்டு  ஆட்சிக் கட்டிலை பிடித்துவிட்டவர். இப்போது தலித் ஆளும் மாநிலமாக பிரகடனப் படுத்தப்பட்டு விட்டது.
தலித் + பார்ப்பனிய அமைப்புகளின் வெற்றிக்கூட்டனி ? கட்டப்பட்டது இராஜ தந்திரமாக பேசப்பட்டது. கான்சிராமினால் முடியாதை மாயாவதி முடித்தார்.
பார்ப்பனியம் +  முதலாளித்துவம்+அதிகாரம் + ஆடம்பரம் +  என்று கூடிக்கொண்டே போகலாம். கூட்டுத்தொகை அரசதிகாரம் மட்டுமே.
இதுதான் மயாவதி பார்முலா?.
பார்ப்பனர்களின் அமைப்பு அவருக்கு பலம். தேர்தல் வெற்றி நிறுபித்தது. பல இடங்களின் மாயாவதியின் துணையோடு பார்ப்பனர்களே வென்றார்கள்.
உயரே உயரே தூக்கி நிறுத்தும் முயர்ச்சியில் பார்ப்பனியம் ?
உண்மையா ? மாயையா ?
மாயாவதிக்கே வெளிச்சம்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களால் இரண்டு எதிரிகள் அடையாளம் காட்டப்பட்டது. ஒன்று பார்ப்பனியம் மற்றொன்று முதலாளியம்.
எதிரிகளே தோழர்கள் மாயாவதிக்கு ?
தலித் செல்வி முரண்களின் தொகுப்பாக உருவாகி... உருவாக்கப்பட்டுள்ளார்...
அவரை  முதலாளிய அதிகாரத்தில் தள்ளுவது பார்ப்பனியம்.
மிதிக்கப்போவதும் இக் கூறுகளே.
அதே ஊடகங்கள் மக்கள் விரோத போக்காக உயர்த்திப்பிடிக்கிறது.
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக உள்ள மாயாவதி ஆடம்பரத்தை தவிர்த்து இருக்க வேண்டும்.
ஆனால் பார்ப்பனிய பார்த்தினியம் அவரை அறித்துக் கொண்டு இருக்கிறது.
எதை  எதிரியாக நினைத்து போராடச் சொன்னாரோ அண்ணல் அம்பேத்கர் ,அதிலேயே கரைந்து விட்டார்.
பார்ப்பனிய ஊடகங்கள் ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி...கதையாக அவரை உடைக்கப்போகிறார்கள்.
கான்சிராமின் கனவு பிரதமர் பதவி...
இப்படியே போனால் சாத்தியப்படுமா?
பார்ப்பனியப் பாம்பு....
முதலாளித்துவ பாம்பு விடுமா?
மாயாவதியை.....

4 comments:

மதுரை சரவணன் said...

நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

அஞ்சான் said...

வாழ்த்துக்கு நன்றி. இப்போக்கு தலித் மக்களை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை இப்படியா இருக்க வேண்டும்.

bandhu said...

அதாவது மாயாவதி நல்லவர். பாவம் சேர்க்கை சரியில்லை, இல்லையா?
நடத்துங்கள். கேப்பையில் கேழ்வரகு வடிகிறது என்று சொல்கிறீர்கள்..

அஞ்சான் said...

நான் மாயாவதியை சொக்கத்தங்கம் என்றோ கறைபடியாதவர் என்றோ கூறவில்லை. தான் சார்ந்த சமூகத்தை மறந்து பார்ப்பனியத்துடன் கரைந்து விட்டார். தலித் சமூகத்தை வைத்து அரசதிகாரத்தை மட்டும் பெறத்துணிந்துள்ளார் என கூறுகிறேன்.
கருத்து வெளிட்ட ரவிக்கு நன்றி.

Post a Comment