பல பதிவுகள் அலசப்பட்டுவிட்டது.
நித்தியானந்தனின் வீடியோ நாளொன்று வந்த வண்ணமுள்ளது.
பணிவிடையின் தொடர் நிகழ்வு... என்கிறார்.
செய்தி ஊடகங்களுக்கு நல்லத் தீனி
தூக்கிப்பிடித்த வார இதழ்கள் இப்போது பணம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
மூன்று காட்சிகளை பார்ப்போம்.
காட்சி.1.
காஞ்சி சங்கராச்சாரியார் பங்கெடுத்த நிகழ்ச்சி இந்திய அரசின் தொலைக்காட்சியின் செய்தியில் ஒளிபரப்பாகியது. அதில்..
எஸ்.வி.சேகர் பவ்வியமாக சங்கராச்சாரியின் காலடியில் அமர்ந்துள்ளார். ஒரு வங்கியின் நிகழ்ச்சி அது.
சங்கராச்சாரி கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். வழக்கு இன்னும் புதுவை மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இக்காட்சி அரசு தொலைக்க்காட்சி ஊடகத்தில் தடையில்லாமல் ஒளிபரப்பாகிறது.
எஸ்.வி.சேகர் முன்னால் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மட்டு மல்ல. இந்நாள் திமுக ஆதரவாளர் ?!. திமுக கூட்டிய பொதுக்குழுவில் சகல மரியாதைகளோடு கலந்துகொண்டவர், இன்று சங்கராச்சாரி காலடியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். இந்த ஒளிபரப்பு எதை முன்னிலைப்படுத்துகிறது.
காட்சி.2.
இதுவும் காஞ்சிபுரம்...
புளுபிலிம் ரேஞ்சுக்கு எந்தவித நுட்பங்களும் இல்லாமல் தன் செல்போனை வைத்து இறையருள் சேவைகளை செய்து ஆவணமாக்கியவர் தேவநாதன்.
புனிதம் என்று கூறப்படுவது, பாலியியல் தேவைகளை பூர்த்திசெய்யும் படுக்கையறையாக மாற்றியவர் கடவுளின் பிரதிநிதி தேவநாதன்.
அவர்கள் புனிதம் என்பார்கள்.
நாம் கடைபிடிக்க வேண்டும். அவர்களே மீறுவார்கள்...
காரணம்...
காட்சி.3.
நித்தியானந்தன் படுக்கையறை.
வயது 32. நல்ல ஆங்கிலப்புலமை... பெண் தோற்றத்துடன் கூடிய ஆண். ஊடகங்களின் இறையருள் நாயகன்...
கதவு திறந்ததும் இவரின் அந்தரங்கள் வந்துக் கொண்டு இருக்கிறது.
நாளும் ஒரு வீடியோ பேட்டி..
இணையத்தில் டாப்லிஸ்டில்.. இவரின் வீடியோ.
ஒப்புதல் கொடுக்கிறார்.
முக்தியில் முழ்கி.முழ்கி திளைத்து உபதேசங்கள் வழங்குவார்.
நாம் அவரின் காலைதொட...
பெண்ணாக இருந்தல்.... தொடத்தொட சுகமே.
பணிவிடைதான். ஜட்டி தெரிகிறதா. அது முக்தியின் ஓரங்கம்.
நம்பவேண்டும்.
இன்னும் ரஞ்சிதா அப்படித் தான் சொல்கிறார்.
காட்சி.4.
இவர் ஜீன்சில் தான் தோன்றுவார், கண்ணை மறைக்க சன்கிளாஸ். இவரின் ஆன்மீக நிகழ்ச்சி இன்னொரு தொலைக்காட்சியில் வருகிறது.
சாமியார். முன்னிலையில் உட்கார்ந்து இருக்கிறார்.
டிரம்ஸ் பீட் துவஞ்குகிறது. இரண்டு பக்தர்கள் லெப்டாப்பில் டிஜிட்டல் இசையை மிக்சிஞ் செய்து பேஸ் எபெக்டில் ஹை வாட்சில் அரங்கம் அதிருகிறது.
பக்தர்களின் சுருதி கொஞ்சம் கொஞ்சம் ஏறுகிறது. அரங்கமே ஆடுகிறது.
செல்லச் செல்ல சாமியாரும் ஆடுகிறார்.
இறுதியில் சாமியார் கூறுகிறார் ”சிவன் இதைத்தான் விரும்புகிறார்”.
இந்த மூன்று நிகழ்வுகளும் எப்போதோ என்றோ நடந்தது அல்ல..அன்மை நிகழ்வுகளே அது..
அரசு,அதிகாரம், பணம் என்ற நிலையுடன் தொடர்புடையது.
இந்த அரசை காப்ப்பது இந்து மதம்.
அரசின் அச்சானிகளில் இந்து மதம் ஒன்றாகிப் போய்விட்ட்து.
இந்துமதத்தின் உயிர்த் துடிப்பாக பார்ப்பனியம் துடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த சாமியாயர்கள் இதில் தான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிரார்கள். மக்கள் பிரதிநிதிகள், பெரும் பணக்காரர்கள், நடிகர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என அனைவரும் இவர்களின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.
ஜெயந்திர சங்கராச்சாரியின் ஒரு நிகழ்வில் சில நாட்களுக்கு முன்னாள் கூட நாடறிந்த ஒருவராக பாஜக தமிழகத் தலைவர் இராதாகிருஷ்ன்ன் கலந்து கொண்டார்.
கோவிலில் மணியாட்டும் தேவநாதனின் பேங்க் பேலன்ஸ் பார்த்து போலிசே திகைத்து நின்றதாக செய்திகள் வந்தது.
நித்தியானந்தனின் ‘ஆண்’மிக பீட’ சொத்துக்கள் ஏராளம். கோடி கோடியாகத் தேரும்.
எளிய கேள்வியை இப்படி கேட்கலாம்.
இவர்களுக்கு எப்படி இந்த வசதி, அதிகாரம், சொத்து... இதர கிடைத்தது ???
மக்கள் மத்தில் பிரச்சனைகள் ஏராளம்.
எல்லாத் தரப்பு மக்கட்பிரிவினரிலும் இப்பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
‘புனிதத்தை’ தூக்கிப்பிடிக்கும் இவர்கள் அதை பயன்படுத்துக் கொள்கிறார்கள்.
கொலைக் குற்றத்தில் இருந்து இன்னும் விடுபடாத நிலையில் சலக அரசு மரியாதைகளோடு சங்கராச்சாரி வலம் வருகிறார்.
நித்தியானந்தன் இணையத்தின் மூலம் தினமும் விடியோவில் பேசிக் கொண்டு இருக்கிறார்.
தேவநாதன் கௌபாய் தோற்றத்தில் வெளிவந்துள்ளான்.
இது தொடரும் நிகழ்வுகளே...
அரசு.மதம்
அதிகாரம்.மதம்
பணம்.மதம்
சொத்து.மதம் என்று பினைந்துள்ளதோ அதுவரையில்
அரசு அதிகாரம் பணம் எல்லாம் இவர்களில் படுக்கையறைகளில் மலர்கள் போல மிதிப்படும்.
இவர்களின் ஆணுருப்புக்கு மாட்டும் காண்டமாக அரசு அதிகாரம் சொத்து போன்றவைகள் பாதுகாக்கவே செய்கிறது.
அறுத்தெரியப்பட வேண்டியது ஆணுருப்பு மட்டுமல்ல...

5 comments:
//அறுத்தெரியப்பட வேண்டியது ஆணுருப்பு மட்டுமல்ல//
சமீப காலத்தில் நடந்த கூத்துக்களைக் கேள்விப்பட்டபோது; அரசாங்கமே சாமியாராகுவோரை
விண்ணப்பம் செய்யும் படி அறிவித்து; அதற்கு ஒரு கட்டணம் அறவிடலாம். சாமியாரானபின் வரிச் சலுகையில்லாமல்; வருமான வரி கட்டும் படி பணிக்கலாம்.
மாடு; நாய்க்கு "காயடிப்பதுபோல்" அரசசெலவில்
"காயடித்து" சான்றிதழும் கொடுத்து; ஆச்சிரம, மட வாசல்களில் மக்களின் கண்ணில் படும் படியாக
அந்த சான்றிதழ் வைக்கப்பட வேண்டுமென அரசாணை இடலாம்.
அத்தோடு தகவலறியும் சட்டப்படி ஒவ்வொரு சாமிமாரின் சகல விபரங்களும் அடங்கிய தகவல் கோவையை, இணையத்தில் இடலாம். அதில் "காயடித்த வைத்தியர்" விபரமுட்படக் கொடுக்கலாம்.
மடங்கள், ஆச்சிரம வாசலில் அரசசெலவில் படப்பிடிப்புக் கருவிகளைப் பொருத்தி; 24 மணிநேரமும்,வங்கிகள் போல் படப்பிடிப்புச் செய்யலாம்.
சாமிமார் தூங்குமறைகளை குண்டு துளைக்காத கண்ணாடி அறைகளாக அமைக்கும் படி ஆணையிடலாம்.
அத்துடன் விடுதிகளுக்கு திடீர் சோதனைசெய்து, அழகிகளுடன் கைது செய்வது போல்; மடங்கள்
ஆச்சிரமங்களுக்கும் திடீர் சோதனைக் குழு உருவாக்கலாம்.
மற்றும் படி உங்கள் கோவத்தை உணர்கிறேன்.
விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு சிந்திப்போமானால், கட்டுரையாளரின் கருத்து உணர்வு பூர்வமானது.
மிக சரியானதும், சிந்திக்க வேண்டியதுமாகும்.
மதவெறி சக்திகள் எந்த அளவு இந்திய அரசியலிலும் , ஆட்சியிலும், வேரூன்றி
போயுள்ளது என்பது கண்கூடாக தெரிகின்றது.
பல்வேறு சமய வழிபாடுகளைக் கொண்ட சமத்துவமிக்க ஜனநாயக நாட்டில், " இந்துத்துவ வேங்கைகளின் வெறியாட்டம் " தொடர்கின்றது.
சுய சிந்தனையுள்ள, மனிதநேயமிக்க
தேச நலனில் அக்கறையுடைய, இளைஞர் சமுதாயம்,
தீய சக்திகளை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிய முன்வர வேண்டும்.
நமது நாட்டை வல்லரசாக்கும் முனைப்புடன் நல்லரசாகவும், மனித மாண்புடைய தேசமாகவும் மாற்றிக்காட்ட முயல வேண்டும்.
பதிவருக்கு மனமார்ந்த நன்றிகள்!
சத்தியமான முத்திரை செய்திகளை அள்ளித் தாருங்கள் !
பேட்டை கே. மைதீன் - தம்மாம் சவுதி அரேபியா.
விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு சிந்திப்போமானால், கட்டுரையாளரின் கருத்து உணர்வு பூர்வமானது.
மிக சரியானதும், சிந்திக்க வேண்டியதுமாகும்.
மதவெறி சக்திகள் எந்த அளவு இந்திய அரசியலிலும் , ஆட்சியிலும், வேரூன்றி
போயுள்ளது என்பது கண்கூடாக தெரிகின்றது.
பல்வேறு சமய வழிபாடுகளைக் கொண்ட சமத்துவமிக்க ஜனநாயக நாட்டில், " இந்துத்துவ வேங்கைகளின் வெறியாட்டம் " தொடர்கின்றது.
சுய சிந்தனையுள்ள, மனிதநேயமிக்க
தேச நலனில் அக்கறையுடைய, இளைஞர் சமுதாயம்,
தீய சக்திகளை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிய முன்வர வேண்டும்.
நமது நாட்டை வல்லரசாக்கும் முனைப்புடன் நல்லரசாகவும், மனித மாண்புடைய தேசமாகவும் மாற்றிக்காட்ட முயல வேண்டும்.
பதிவருக்கு மனமார்ந்த நன்றிகள்!
சத்தியமான முத்திரை செய்திகளை அள்ளித் தாருங்கள் !
பேட்டை கே. மைதீன் - தம்மாம் சவுதி அரேபியா.
நன்றி. யோகன்.அரசுடன் உள்ள சங்கிலிப்பினைப்பை உடைக்காதவரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
கருத்துரைத்தமைக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்.
பேட்டை கே. மைதீன் அவர்களுக்கு,
மதசார்பற்ற நாடு பெயருக்கு, ஆனால் நிலையோ தலைகீழ் .
தங்கள் கருத்துக்கு நன்றி.
Post a Comment