எல்லாம் தயார்
செயின் புனித ஜார்ஜ் கோட்டை
அது
வெள்ளைக்காரன் அடையாளம்.
இதுவரை வெள்ளையனின் கோட்டையில்
மூவர்ணக் கொடியை ஏற்றியது போதும்...
ஜெய். ஹோ....
ஜனநாயகத்தின் தூண் சட்ட மன்றம்
இனி
புதிய அரண்மணையில்..
கலைஞர் பார்த்து பார்த்து கட்டியது
தனையனுக்காக...
சரி அது
தளபதிக்கா
அஞ்சாநெஞ்சனுக்கா ?
அது உட்கட்சி விவகாரம்.
பொதுக்குழு
உயர்மட்டக்குழு
கோபாலபுரத்து மடம் முடிவு செய்யும்.
இது என்ன அடைமொழி?
அடைமொழி இல்லாமல் இல்லாமல்
எங்கள் தலைவர்கள் உண்டோ ?
புரட்சிச் செய்யாதவன் தலைவன்
ஊழல் ராணிக்கு புரட்சித்தலைவி
இன்னும் வேண்டுமா ?
தென்னாட்டு காந்தி
பெர்னாட்சா....
கர்மவீரன்.....
இனக் கொலை செய்தவனுக்கு
தூணாய் நின்றவன் தமிழர் தலைவன்..
படையே இல்லாதவன்
தளபதி...
அஞ்சாநெஞ்சன்...
புரட்சியிலும் புயல் இவர்..
வலுவிழந்த காற்று மண்டலத்தின் பெயர்
புரட்சிப்புயல்.
எதை தகர்த்தது என்ற கேள்வி வேண்டாம்?
அறியாசனம் இருக்கும் வரை
அடைமொழிக்கு பஞ்சமில்லை.
அடைமொழி துண்டித்தால்
இவர்கள் உயிர் துறப்பார்கள்.
அரண்மணை தயார்...
கழகக்கொடி அரண்மனையில் பறக்க
கலைஞரே வருக
ஏற்றுக
அரியணையில்
தளபதியையோ..
அஞ்சாநெஞ்சனையோ....
ஏற்றுக
அரியணையில்
எம் சகோதரனை
சாகடித்தவைத்தவனை
அரியணையில் வைத்து
அழகு பார்த்தவர்கள்
நாம்.
இவர்களை
ஆளவிட மாட்டோமா?
எம் கனவுத்தமிழன்
தூக்கத்தில் இருக்கிறான்..
தளபதியே
அஞ்சாநெஞ்சனே வருக
அரியணையைப் பெறுக.
பார்த்து பார்த்து கட்டிய கட்டிடம்
நிழல் தலைவனுக்கு
அரண்மனைத் தயார்
கலைஞர் நல்ல நேரத்தில் ஓய்வை
அறிவிப்பார்..
சவப்பெட்டியை பார்த்து
ஓட்டுப் போட்ட தமிழனுக்கு
வாக்குப் பெட்டி பார்த்து
வாக்களிக்காமல் இருப்பார்களா?
அரியணை யாருக்கு?
தளபதிக்கா?
அஞ்சாநெஞ்சனுக்கா?
அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் ?
பொது குழு
உயர்மட்டக்குழு
மொத்தத்தில் கோபாலபுரத்து மடம் முடிவு செய்யும்?
அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் ?
எம் கனவுத்தமிழன்
தூக்கத்தில் இருக்கிறான்..
தளபதியே
அஞ்சாநெஞ்சனே வருக
அரியணையைப் பெறுக.
No comments:
Post a Comment