தருமபுரி மாவட்டம்.. பென்னாகரம் மற்ற இடைத்தேர்தல்களில் பற்றிய பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது.
தினமும் பாமகவின் நிறுவனர் இராமதாஸ் அறிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்கிறார்.
பணம்தான் இத்தேர்தலில் முக்கியமாக இருக்கிறது எனவும். இப்படியே போனால் தொகுதிகளை எலம்விட்டுவிடலாம் என்று கூறியுள்ளார். பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகனோ அத்துமீறம்.. போலீஸ் மிரட்டல்... பணம்..அதிகாரம் தொகுதி முழுக்க விளையாடுவதாக நாளாந்தம் கூறிவருகிறார்.
அதிமுகவோ சந்தையில் தொலைந்த குழந்தைப் போல திருதிரு என முழித்துக் கொண்டு இருக்கிறது.
10 கிராமங்களுக்கு ஒரு அமைச்சர்...
அவரின் இலக்கு அக்கிராமத்தில் இருக்கும் வாக்குகளை பெற்றுத்தர என்ன முயற்சி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொள்ளவேண்டும். ஆம் அவரின் பதவி வேண்டுமென்றால் செய்துதான் ஆகவேண்டும்.
வந்தவாசித்தொகுதியில் இதுதான் கைக்கொடுத்த்து ...வென்றது...
திமுகவுவின் பல இலவசத்திட்டங்களின் சாதனைகளுக்கும் பென்னாகரம் பெரும் தலைவலியே.
திமுக தோற்றால் நிலையே வேறு... மக்களின் நம்பிக்கையினை இழந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூற ஆரம்பித்துவிடும்.
மிக பிற்பட்ட மாவட்டமான தருமபுரி பென்னாகரம் வாக்காளர்கள் பெரும்பாலும் வன்னியர்களே. பாமக கூட்டு இல்லாமலேயே தனியாக வென்றத் தொகுதி. இவர்களின் மூலதனம் சாதி ஓட்டே.
கைக்கொடுக்குமா?
திமுகவுடன் கூட்டுக்கு தயாராகிவிட்ட பாமவுக்கு இது சங்கடமே. வென்றால் பேரத்தை உரிமையாக செய்யலாம்.
ஆனால் பாமகவின் அரசியல் நம்பகத்தன்மை மக்களை யோசிக்க வைத்துள்ளது. இவர்கள் எந்தபக்கம் வேண்டுமானாலும் செல்வார்கள் என்று இன்றும் பேசி கிண்டலடிக்கும் நிலையில் தான் மக்கள் உள்ளார்கள்.
போதாதகாலம் பாமவுக்கே..
மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சியோ வழக்கம் போல வரலாற்று போற்றும் நடவடிக்கையை எடுத்துள்ளார்கள்.
ஆம் இவர்கள் மேடையில் மட்டுமே அதிமுகவுக்கு வாக்குகளை கேட்பார்களாம்.
திமுகவோ பன்முணை தாக்குதல் தொடுத்தால் தான் வெற்றியை ஈட்டமுடியும்.
வாக்குகளுக்கு கொடுக்கும் கரன்சிகளின் எண்ணிக்கை 500...1000...1500... என்று கூட உயரலாம் என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பணம்.. இலவசங்கள்... சாதியம்... அதிகாரம்... அத்துமீறல்..
வழக்கம் போல மக்கள் தோற்க...
இவர்கள் வெள்ளப் போகிறார்கள்.

No comments:
Post a Comment