நவீன உலகம்,விஞ்ஞான நுட்பம் பெறுக பெறுக பணிகள் எளிதாக்கிவிட்டது. ஆனால் உலகம் மனிதனிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டே போகிறது.
நமது மானுடச்சமூகம் எதிர் நோக்கும் மிக முக்கியமான விளைவு உலக வெப்ப மயமாதலே.
உலக வெப்பமயமாஅதல் நிகழ்வு ஏழை பணக்கார நாடுகள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை . பாதிப்புகள் தொடர்கிறது.
இது குறித்த ஆய்வுகள் சுற்றுச்சூழல் பற்றி பல நடந்து கொண்டு வருகிறது.
அமெரிக்க விஞ்ஞானிகள் தற்போதய ஆய்வில் உலக வெப்பமயமாதல் நிகழ்வினூடே பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், மரங்கள் வேகமாக வளர்வது கண்டறிப்பட்டுள்ளது. 200 ஆண்டுகள் வெப்பம் உயர்ந்து கொண்டே வருவதற்கான முக்கிய காரணம் கார்பன்டை ஆக்சைடு வின் அதிக வெளிப்பாடே.
இவ்வாய்வுப் பணிக்காக 55 காடுகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். ஸ்மித்சோனியனின் சுற்றுச்சூழல் ஆய்வு (Smithsonian Environmental Research Center) மையம் எதிர்பார்ப்பதை விட அதிக வளர்ச்சி நிகழ்வதாக கண்டறிந்துள்ளனர். உகலவெப்ப மயமாதல் நிகழ்வுக்கு காரணமான அதிக கார்பண்டை ஆக்சைடு வெளிப்பாடு மரங்களை அதிக அளவில் வளரச்செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
இப்பாதிப்பினூடாக 1.8 டன் டிம்பர் மரங்கள் கூடுதலாக வளர்ந்துள்ளதாக இவ்வாராய்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
எப்படியோ நல்ல முடிவுகள் வந்தாலும் மரங்களை வளர்ப்பதும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் நம் கைகளில் தான் உள்ளது.



No comments:
Post a Comment