மலையாள நாட்டில் தன் மாநில உரிமைக்காக கட்சிகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
கன்னட நாட்டில் காவிரி நீர் வராமல் தடுக்க சாதியை, அரசியலை துறக்க அவர்கள் அஞ்சுவதில்லை.
மும்பையில் ஒரு பீகாரி ,தவறாக போலிசால் சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு லாலு ,பஸ்வான், நிதீச் குமார் போன்றோர் அரசியலை மறந்து தன் மண்ணின் மைந்தனுக்காக நின்றதை உலகம் மறக்காது.
இப்போது தெலுங்கான போராட்டம் ஆந்திராவில் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, தெலுங்கான கட்சி,சிரஞ்சிவி கட்சியினர் தங்கள் மாநில நலனுக்காக கட்சியை துறக்கின்றனர்.
மும்பை எங்களுதே என்று சொல்லும் ராஜ்தாக்கரே வின் நலன் சொந்த ஊர் நலன்.
ஆனால்
மாநில உரிமைக்காக கட்சியை துறக்கும் அண்டை மாநிலமக்களின் நலன் எங்கே?
அரசியலுக்காக மாநில உரிமைகளை, சொந்த இரத்த உறவுகளை சாகடித்த தமிழனின் நலன் எங்கே?
இங்கே அவனின் சொந்த அடையாளம் சாதி, மதம் அதையும் மீறி அரசியல் அதுவும் ஓட்டு அரசியல்
இவன் பொதி சுமக்க திமுக...அதிமுக...
தன்னை கொன்ற காங்கிரசுக்கு காவடி தூக்குவதால்.... தேசிய அடையாளம்....
தமிழன் என்ற அடையாளம் அழிக்கப்பட்டதால்....
பொதிசுமக்கும் கழுதையானான்....
தமிழன் எப்போதும் ஏமாறுபவனா?
வரலாற்றுக்கும் இதை தொடர்த்து இதை மெய்ப்பிப்பானா?
1 comment:
Good views....Lets change Every thing.
Iniyoru vidhi seivom
Post a Comment