தோழர் முத்துகுமார் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டங்கள் பரவலாக தமிழகமுழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் எல்லோருமே உணர்வு பூர்வமாகவே ஈழப்போராட்ட ஆதரவு தெரிவித்தார்கள். தேர்தல் நெறுங்க நெறுங்க வழக்கம் போல ஈழமும் அரசியல் சாயம் பூசிக் கொண்டது.
திமுக அணியில் திருமா, சுபவீ மற்றும் திராவிடர் கழக வீரமணியும், அதிமுக அணியில் இராமதாஸ், வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஈழ ஆதரவின் உச்சமாக ஜெயாவோ தேர்தல் மேடையில் எல்லாவற்றிலும் ஈழ ஆதரவு முழக்கம் முழங்கினர்.
ஓட்டு அரசியலால் ஈழம் தமிழக அரசியல் சாயம் பூசிக்கொண்டது உண்மையே. இவர்களுக்கு ஓட்டே இலக்காக ஆனது.
இந்நிலையில் ஈழப்படுகொலையை முன்னிலைப்படுத்தி அதிமுக அணி திமுகவை தாக்குதல் நடத்தியது. இதில் திருமா தான் அதிகம் பாதிக்கப்பட்டார். இப்போதுக்கூட திருமாவளவன் மீது ஈழத்திற்காக துரோகமிழத்ததில் பெரும்பங்குள்ளதாக குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
நான் இதற்காக திமுகவை ஆதரிப்பதர்காக இப்பதிவை எழுதவில்லை. தேர்தலில் அரசியல் சாயத்தோடு ஈழத்தை அனுகியவர்கள் அனைவருமே துரோகக் கறையை தங்கள் முதுகில் உள்ளதை பார்க்க மறுக்கின்றனர்.
இராமதாசு, நெடுமாறன்,வைகோ போன்றோர் தேர்தலில் திமுகவை வீழ்த்தும் ஆயுதமாக பயன்படுத்தமுடியுமா என்றே அவர்கள் அணிதிரண்டனர்.
நெடுமாறன்,வைகோ போன்றோர் திமுக எதிர்ப்பு அரசியலையே இலக்காக கொண்டு இருந்தனர். இதற்காக தமிழக அரசியலின் அசிங்கம் ஜெயாவை அப்பட்டமாக ஆதரித்தனர். ஈழத்தை விடிவிக்கும் தேவதையாக சித்தரித்தனர். இதேப் போல பாஜக தேர்தலில் வென்றால் இந்திய அயலுறவில் மாற்றம் வரும் என்று கருத்தியல் பரப்பப்பட்டது. இதற்கு சாட்சி இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே . இக்கருத்தியலுமே புலிகள் மத்தியில் இருந்திருக்க வேண்டும்.
ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியல், ஈழப்போரை நிறுத்த உதவும் என்ற கருதுகோளை மக்கள் மத்தியில் ஊன்றினர். குறிப்பாக ஈழ ஆதரவு நாயகனாக சித்தரித்த சீமான் மற்றும் அறிவுமதி போன்றோர் இப்பணியை செய்தார்கள்.
முத்துக்குமார் கண்ட கனவு அழிந்ததில் திருமாவளவனுக்கு மட்டும் பங்கில்லை. எல்லா ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளின் முகத்தில் துரோகக் கரி படிந்துள்ளதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

2 comments:
ஓட்டுப்பொறுக்கிகளுக்கு மட்டுமா பங்கு, தலைவனுக்கு சப்பை கட்டு கட்டும் ஜால்ரா தொண்டர் பொறுக்கிகள், ஓட்டை பிரியாணிக்கும் காசுக்கும் விற்ற பொறுக்கிகள், ஆயுதம் கொடுத்த கொலைகாரர்களுக்கு வலிக்காமல் கவிதை எழுதிய கவிதை பொறுக்கிகள் என பெரிய லிஸ்ட்டே இருக்கின்றது, இதில் ஓட்டு பொறுக்கிகள் சிறிய விழுக்காடே
http://kuzhali.blogspot.com/2010/01/blog-post_29.html
ஜெயலலிதாவைவிட கருணாநிதி எந்தவிதத்தில் பெட்டர்.இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .விஜி.
Post a Comment