
ஒருகால் தைலாபுர தோட்டம் போர் அடித்துவிட்டதோ? டெல்லி அரசியலில் இருந்தவருக்கு வெட்டியாக இருந்தால் பொழுது போகச்செய்யாததுதான். அதற்காக இப்படியா?
பாமகவின் போர்குணத்தை தேர்தலில் சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருமாற்றிவிட்டர்கள். இவர்களின் இலக்கு சட்டமன்றம்தான்.
பென்னகரம் இடைத்தேர்தல் பாமகவுக்கு பெரும் சவாலே. திமுகவை முன்பு போல விமர்சிக்கப்போவதில்லை என்று இராமதாஸ் சில தினங்களுக்கு முன்னமே கூறிவிட்டார்.
இப்போது ஒரே பிரச்சனை அசல் அஜித்தான். அவர் படத்தில் சுருட்டு பிடிப்பது தமிழகத்தை பெரும் பின்னடைவுக்கு கொண்டு சென்று விட்ட. உடனே கடிதம் எழுதுகிறார் அன்புமணி அஜித்துக்கு..
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இளைஞர்களை சீரழிக்கும் போக்குகளை கண்டிக்கத்தான் வேண்டும். அதை ஒரு தொடர்சியான இயக்கமாக நடத்தப்பட வேண்டும்.
அன்புமணி சுகாதார அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவையே. கல்வி மற்றும் பொது இடங்களில் புகைக்க தடை கொண்டு வந்து இருப்பது ஒரு மைல் கல்லே.
ஆனால் , இன்று ஒரு நடிகர் சுருட்டு பிடிக்கும் காட்சிக்காக ஒரு இயக்கத்தை நட்த்துவதுதான் யோசிக்க வைக்கிறது.
திமுக ஆட்சியில் சுற்றுச்சூழலை பாழடிக்கும் மணல் கொள்ளை கேட்பாரில்லாமல் போய் கொண்டு இருக்கிறது. பாமகவை கேட்டால் நாங்கள் போராட்டம் நடத்தவில்லையா? அறிக்கை விடவில்லையா? என்ற பதிலை எதிர்பார்க்கலாம். கேளிக்கூத்து என்னவென்றால் பாமக சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ள அவர்களின் தொகுதிகளிலேயே கொள்ளையோ கொள்ளை. இதில் தான் சந்தேகம் வருகிறது.
இப்போது மரபணு மாற்றிய கத்தரி தமிழ்நாட்டுக்கு வர முயற்சிக்கிறது.
வேலூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளால் குடிநீரே குடிக்க உகந்ததாக இல்லாமலாகும் நிலை நீண்ட தொலைவில் இல்லை.
தமிழ்நாட்டுக்கு இரண்டு அணு குண்டுகள் உள்ளது.
ஒன்று கல்பாக்கம்.
மற்றொன்று கூடங்குளம். அதன் கதிர்வீச்சால் தமிழகம் இன்னொரு இரஷ்யா செர்னோபில்லாக ஆகப் போகிறது. இதற்கான நடவடிக்கைகள் என்ன அன்புமணி அவர்களே?
நாளைக்கூட அஜித் சுருட்டு பிடிக்கும் காட்சியை நீக்கலாம்?
வெற்றி! வெற்றி!! என்ற சுவரொட்டிகள் ஊரில் ஒட்டப்படலாம். செய்தி ஊடகங்களில் அன்புமணியின் வெற்றி நேர்கானல், அஜித்தின் விளக்கம் கூட வரலாம்.
உண்மையான சுற்றுச்சூழல் அப்படியே உள்ளது...
பிரச்சனைகள் இல்லாதவற்றை பிரச்சனையாக்குவது உண்மையான பிரச்சனைகள் மறைக்க சமமானதே!

2 comments:
PMK MLA have filed petition in High court regarding the Sand quary issue.
On investigating the matter, hihg court have condemmed the District collectrated for not taking action .
Before telling/accusing anything/anybody , just think your information are correct.
--
பி.டி கத்தரிக்கையை பொது மக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது வணிக பயன்பாட்டிற்கோ அனுமதிப்பதை எதிர்த்த ஒரே மத்திய அமைச்சர் அன்புமணி மட்டுமே.நிறுவன வேளாண்மை ஊடாக மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை கடைவிரித்திரிக்கும் இன்றைய சுயநல ஆளும் வர்க்கத்தோடு ஒப்பிடும்போது அன்புமணியின் செயல்பாடுகள் உயர்வானது என்பதை மறுக்க முடியாது.
சமுதாய கண்ணோட்டத்துடன் சிந்திக்க தெரிந்த வெகு சில அமைச்சர்களில் அன்புமணியும் ஒருவர்.அதற்காக எந்தவொரு இழப்புக்கும் விளைவுக்கும் முகம் கொடுக்க தயார்ரக இருப்பது பாராட்டபடவேண்டிய அம்சம்.
Post a Comment