நேற்று திடீர் விஜயம் செய்தார். போடு போடு என்று போட்டார். இன்று செய்தி ஊடகங்களில் எல்லாம் அவரின் செய்திகள் தான். சட்டசபை முடியப்போகிற போது திடீர் விஜயம் . வழக்கமாக பதவி காலாவதியாகக்கூடாது என்று கையெழுத்து மட்டும் இட்டுச்செல்வார். எல்லாம் முதல்வர் கலைஞரின் பெயரைக்கொண்டே திட்டங்கள் வருவதாக அவரின் பிராதான குற்றச்சாட்டு. அதில் உண்மை இருக்கிறது. ஆனால் அவரின் ஆட்சியில் அம்மையார் பெயர் இல்லாத திட்டங்கள் உண்டா ? ஜெயா புராணங்கள் பாடாத சட்ட சபை உறுப்பினர் உண்டா ?
இவரின் கடை கண் காட்டியவுடன் சட்ட சபைமேசையெல்லாம் அதிருமே?
தொலைக்காட்சியில் சட்ட மன்ற தொகுப்பை பார்க்க முடியுமா?
அம்மா!
தாயே! ( இது பிச்சை வார்த்தை அல்ல)
தெய்வமே!
நிரந்தர முதல்வரே!
தன்னிரகல்லா தலைவியே! போன்ற வார்த்தைகள் இல்லாமல் சட்ட மன்றம் நடந்த்துண்டா?
என்று தமிழக வளர்ச்சி பற்றி இவர்கள் பேசி இருக்கிறார்கள்?
போயஸ் தோட்ட வளர்ச்சிதானே இவர்களின் இலக்கு ?!.
தன்னை பார்ப்பனத்தி என்று சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்தியவரல்லவா?
என்ன சாதிவெறி?
இதை அப்போது ஊடகங்கள் பேசவே இல்லையே?
ஏனென்றால் அவர்களின் பிரதிநிதித்துவத்தின் குரல் ஒலித்தது பற்றி புலாங்கிதம் அடைந்தார்களோ?
ஈழத்திலே படுகொலைகள் தொடர்ந்த போது போரென்றால் சாகத்தான் செய்வார்கள் என்று இராஜபக்சேவுக்கு டப்பிங் கொடுத்தவர் தானே தாயுள்ளம் கொண்ட ஜெயா !.
3இன்ச்சுக்கு மோதிரம் போடிருந்த சட்டமன்ற அடிதடில் புகழ் தாமரைக்கனி என்ன சாமரம்தான வீசிக்கொண்டிருந்தார்.
எனக்கு வானுயர்ந்த அதிகாரங்கள் உண்டு என்ற சிறந்த அடிமையை சபாயகராக வைத்திருந்தாரே அவராடிய ஆட்டமென்ன?
ஆனந்த விகடன் தீட்டிய ஒரு கேலிச்சித்திரத்துக்காக அதன் ஆசிரியர் சட்டசபைக்கூட்டத்திலே நிற்க வைக்கப்பட்டாரே?
வானுயர கட்டவுட் கலாச்சார புகழ் இன்றும் தொடர்கிறதே!
அம்மையார் வந்தவாசி வந்த போது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழிநெடுக டிஜிட்டல் பேனர் மற்றும் குழல் விளக்குகள் வைக்கப்பட்டதே ( உத்தேசமாக 30 கிலோமீட்டர் ) , என்ன எண்ணம் அம்மையாருக்கு?.
இப்படியே சொன்னால் பதிவுகள் பல எழுதவேண்டும்
இப்படியே சொன்னால் பதிவுகள் பல எழுதவேண்டும்

3 comments:
ஏனடா தவறு செய்தாய் என்றால் அதை கேட்க உனக்கு அருகதை கிடையாது, நான் அப்படிதான் செய்வேன் என்பது போல் உள்ளது!
என்னைய கலர் டெம்ப்ளட் வச்சி இருக்கிறாய், படிக்க முடியல, அத மாத்து
சரி என்ன இப்ப . கோவணம் ஒன்னு இந்த பொங்கலுக்கு இலவசமா வேணும். அதான ? அதுக்கு ஏன் தொண்ட கிழிய கத்துற , பேரன் பத்து கோடில படம் எடுக்குறான். எல்லாம் தாத்தன் மூட்ட தூக்கி சம்பாதிச்சது. துண்டு தலைல விழுரப்ப கிழிச்சி தருவான். வாங்கி கட்டிக்க. நீங்கல்லாம் ஏண்டா பொறந்தீங்க ?
Post a Comment