பொங்கல் விழா வேண்டாம் என்கிறார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா. ஆம் நாங்களும் துயரத்தில் இருந்தோம் ஆனால் நீங்கள் சோனியாவுடன் காங்கிரசுடன் கூட்டணி தர்மத்துடன் ஓடுக்கேடீர்கள். படுகொலை நிகழும் போதே உங்களின் வெற்றி வெடிச் சத்தத்தில் ஈழ ஒப்பாரி கேட்காமலே போனது.
அய்யா, நெடுமாறன் அவர்களே,
மக்களை ஒருங்கிணைப்புப் பணியில் தங்களின் பங்கென்ன?.
தண்ணியல்பான எழுச்சி தோன்றியபோது முத்துகுமாரின் உடல் மண்ணில் விழுந்தபோதுக்கூட தங்களின் நோக்கம் திமுகவைத்தானே குறிவைத்து ஈழப்போர் எதிர்ப்பு நடவடிக்கையை துவங்கினீர்கள்...
திருமா, நெடுமாறன், சீமான் போன்றோர் ஈழத்தை காயப்படுத்தவே செய்தீர்கள், இன்று வேண்டாம் பொங்கள் விழா என்கிறீர்கள்....
நாங்கள் ஈழதேசம் விழுந்ததில் , கண்ணீர் காயாது இருக்கிறோம்.
நீங்கள் ஓட்டாய், அரசியலாய், விளம்பரமாய் மாற்றி, மாற்றி... ஈழமண்ணையே காயப்படுத்தினீர்கள். ஈழம் விழக்காரணமே தமிழக அரசியல் கட்சிகள், ஈழ ஆதரவை மிகைப்படுத்தி காட்டிவிட்ட விளைவே...

No comments:
Post a Comment