இலங்கையில் வீசப்போகும் ஜனநாயகக் காற்று...



மகிந்தாவா.. பொன்சேகவா...
ஒருவழியாக தேர்தல் முடிந்தது
ஜனநாயகத்தின் வேர் மீண்டும் ஊன்றப்பட்டுவிடட்து..
மக்கள் மன்றத்தில் மக்களாட்சியின் குரலொலிக்கப் போகிறது.
 தாயுள்ளம் சோனியாவின் ஆதரவு ஒருவருக்கு...
செஞ்சீனத்தின் ஆதரவு ஒருவருக்கு...
வியப்புக்கு ஒன்றுமில்லை...
மொத்தத்தில் அமெரிக்கா வெல்பவனை ஆசீர்வாதிக்கும்.
முட்கம்பி வேளியினுல்
புகா ஜனநாயகக் காற்று நாளை புகுமா ?
முள்வேலி படுகொலைகளை பேசாமல்
ஜனநாயகத்தை நிலை நாட்ட
மகிந்தாவா.. பொன்சேகவா...
தேர்தல் முடிந்தது..




இட்லரின் வழித் தோன்றலை
நிறுபித்த மகிந்தா...
பொன்சேகாவுக்கு மட்டும் என்னா
ஆசை இருக்காதா...
இட்லரின் வாரிசாக....

  •  

அதே
இராணுவம்...
போலீஸ்...
சட்டம்....
நீதிமன்றம்...
முள் வேலி...

  •  

ஒன்று மட்டும் சத்தியம்..
பாரம்பரிய ஜனநாயகத்தின் முடிவுகள்
நாளை வெளியாகலாம்..

  •  

இராணுவம்...
போலீஸ்...
சட்டம்....
நீதிமன்றம்...
முள் வேலி...
எல்லாம்
நாளைய அதிபருக்கு
வணக்கம் வைக்கும்...

  •  

ஆனால்
வழக்கமான ஜனநாயக காற்று வீசத்தான் போகிறது..

No comments:

Post a Comment