எப்போ மிட்டாய் தருவாங்க....




வழக்கம் போல
குடியரசு தினம்...
கொண்டாடப்படப்போகிறது..
3அடுக்கு 4 அடுக்கு என்று
பாதுகாப்பிற்கு
எண்ணிக்கை உயரும்.
வழக்கம் போல
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்...
குண்டு துளைக்காத கூண்டில்
இருந்து பேசுவார் தலைமையமைச்சர்...
வறுமைக்கோடு குள்ளமாகிவிட்டதாக
அறிவிப்புகள் வரும்...
அலங்கார அணிவகுப்பு
நடக்கையில்..

  • .


இதோ
நாளைய இந்தியா
நடந்து செல்கிறது..



அண்ணா!
எப்போ மிட்டாய் தருவாங்க...
கொடியேத்தனப் பிறகு...
அப்புறம்...
அடுத்த வருசம்...
சீக்கிரம் நடன்னா...
கால் சுடுது....

1 comment:

துளசி கோபால் said...

உண்மையான நாட்டு 'நடப்பு' இதுதான்.

Post a Comment