கலைஞர் தொலைக்காட்சியில் இன்னும் சில தினங்களில் 3 முத்தான தொடர்கள் என்ற அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. பத்தாதற்கு சன் ஏற்கனவே எல்லா வீடுகளின் இல்லத்தரசிகளின் நெஞ்சில்? பதிந்துள்ளது.
பாமகவுக்கு மக்கள் டிவி
ஜெயாவுக்கு ஜெயா டிவி...
ராஜ்,வின், தமிழன்,இமையம்
காங்கிரசுக்கு வசந்து,மெகா
இப்போது ஊழல் ஒழிக்க வரும் கருப்புத்தங்கம் விஜயகாந்துக்கு கேப்டன் டிவியாம்.
ஆளுக்கு ஒரு டீவி கட்சிக்கருத்துக்களைச்சொல்ல, மக்களை பண்படுத்த, கலாச்சார அளவில் மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்படுத்தவா இவர்கள் வருகிறார்கள்.
பரபரப்பாக போகும் டிலா நோடிலா,மானாட மயிலாட என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.
தோழர் லெனின் சொல்லுவான் “ஒவ்வொரு சொல்லடுக்குகளுக்கும் பின்னால் ஒரு வர்கத்தின் நலன் இருக்கிறது” என்பார்.
அப்பட்டமாக ஓட்டு... மக்களை போதையில் வைக்க நிரந்தரமாக வைக்க கேப்டன் வருகிறார்..
அவர் ஊழலை ஒழிக்க, எல்லைத்தாண்டிய பயங்கர வாதத்தை, ல்க்ஷர் தொய்பாவை தன் இடது காலில் உதைப்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

No comments:
Post a Comment