யார் வென்றாலும் சிங்களுவனுக்கே வெற்றி..!



மகிந்தவா ?  பொன்சேகாவே ? என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு  வின் டிவியில் வந்த நேரலை விவாத்த்தில் தோழர் டாக்டர் விமுனா மூர்த்திக்கூட இதற்கு பதிலளித்து ப் பேசினார். வெறிநாயை ஏவியவனை குறை சொல்வதா? வெறிநாயைக் குறைச்சொல்வதா ? என்றக் கேள்வியை எழுப்பினார்.
கிட்டத்தட்ட 1 இலட்சம்  மக்கள்  படு கொலை..கொலை போர் என்ற பெயரால் சிங்கள தேசியம் நிகழ்தி இருக்கிறது. சுமார் 2 இலட்சம் மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். முள் வேளிக்குப் பின்னால் ஒன்றுமே அறியாத, தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே வதை முகாமில் உள்ளார்கள். தினம் தினம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள். தமிழீழப் பகுதிகளில் சிங்கள காடையர்களின் களியாட்டங்கள்.
கட்டாய குடியேற்றம்... என்று நாளந்தம் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் நிகழ்ர்த்தப்பட்டே வருகிறது.
இதில் பக்சேவுக்கு ஆதரவா ?
பொன்சேகாவுக்கா ? என்று ஆய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பொன்சேகாவை ஆதரிப்பதாக முடிவெடுத்து இருக்கின்றது.

இந்தியா ஒரு வேட்பாளரையும், அமெரிக்கா ஒரு வேட்பாளரையும் ஆதரிப்பதாக கேள்வி.
பொன்சேகாவுக்கு தமிழீத்தின் மீது நட்த்தப்பட்ட போரில் பங்கில்லாதது போலவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஒரு மாயையைத் தேற்றுவித்து இருக்கிறது.
ஒன்று மட்டும் தெளிவாகிறது. பச்சோந்தி அரசியல் தனம் தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களின் தலைமையிலும் இருக்கிறது.!!
இரத்த வாடை போகுமுன் வாக்கு கேட்க வருகிறார்கள். இவர்களுக்கு பின்னால் என்ன செயல்தந்திரம் இருக்கப்போகிறது?
எனக்குத் தெரியவில்லை?

No comments:

Post a Comment