சாதியம் மலம் தின்னவைப்பது இன்றும் தான்.



இன்று இணையத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அச்செய்திதிண்டுக்கல் அருகில் ஒரு கிராமத்தில் தலித் கிருஸ்துவரை சாதி வெறி கிருத்துவர்கள் மலம் தின்ன வைத்துள்ளார்கள். இது நிகழ்ந்துள்ளது கடந்த சனவரி 7ம் தேதியன்று நிகழ்ந்துள்ளது.
காரணம் தெரியுமா அன்பான தோழர்களே “ காலில் செறுப்பைப் போடக்கூடாது என்பது தான்.
புது ஆண்டு 2010 துவங்கிவிட்ட்து.
சாதியம் இந்துமதத்தின் நச்சுப்பல். சாதியம் எங்கெங்கு செல்கிறதோ அங்கங்கு நச்சைகக்கும். சாதிய உரிமைக்காக  எந்த மதத்திற்கு எங்கு சென்றாலும் அவ்வரக்கன் வந்து வழியை மறிப்பான். கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம் மதமானாலும் தன் நச்சுப்பல்லைக்காட்டும்.
 இது தான் இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
மலம் தின்ன வைத்தவனும், மலத்தை தினிக்கப்பட்டவனும் ஒரே மதம் தான்.
இவன் மேல் சாதி கிருத்துவன், அவன் தாழ்த்தப்பட்ட கிருத்துவன் இங்கு ஜீச்ஸ் உயர் இந்து பக்கம் தான் நின்றாறோ ?
சாதியத்தின் கோரப்பல் இது தான்.
இன்னும் எல்லா ஊர்களிலும் தாழ்த்தப்பட்ட கிருத்துவ மக்களுக்கு தனி சர்ச் ,தனி இடுகாடு, தனி கினறு என்று தொடர்கிறதே..
இதற்குத்தான் தந்தை பெரியாரும் அன்னல் அம்பேத்தரும் சாதியத்தை எதிர்த்துப் போராடினார்கள்.
இந்திய சமூகத்தில் இந்து மதம், கிருத்துவமதம், இஸ்லாம் மதம் ஆனாலும் சாதிய அடிமைத் தனத்தை உள்வாங்கிக் கொண்டு கோர முகத்தைக் காட்டுகிறது.
ஆம் தலித் மக்களுக்கு சாதியடிமைப்போக மதம் தீர்வல்ல என்பதையே இதைக் காட்டுகிறது.

No comments:

Post a Comment