நேற்று போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் இந்தியா முழுக்க நடத்தப்பட்டது. இம்முகாம் பேரூந்து நிலையம், விமான மற்றும் தொடர் வண்டி நிலையம் என்று முகாம்கள் வைக்கப்பட்டு அதிகம் கவனம் செலுத்தபட்ட்து. தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 64 லட்சம் குழந்தைகளுக்கு (91 சதவீதம்) முதல் தவணை போலியோ கூடுதல் சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) வழங்கப்பட்டது.பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வரையிலான அனைத்து குழந்தைக்கும் சொட்டு மருந்து போடப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இந்நோயின் பாதிப்பு இன்றும் தொடர்கிறது. இதனால் இன்னும் நமது மாநிலத்தில் இத்திட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக்கவே இந்நோயின் பாதிப்பு இம்மாநிலத்தில் பதிகாவாகாமல் வந்திருக்கிறது.
ஆனால் ஊடகங்கள் தான் தோன்றித்தனமாக “பரபரப்பு” மட்டுமே இலக்காகக் கொண்டு செய்திகள் வெளியிடுகிறது. இன்றுக்கூட சொட்டு மருந்துக்கு 2 குழந்தைகள் பலி என ஒரு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் இந்ந்த இறப்பு நிகழ்ந்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 2008ல் வந்த வதந்தி காரணமாக ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கோயம்பத்தூர் மாவட்டங்களில் பல்ஸ் போலியோ திட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. போலியோ சொட்டு மருத்து போட்ட பெற்றோர்கள் குழந்தையுடன் பயத்தின் காரணமாக முற்றுகை இட்டனர். இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் இச்சொட்டு மருந்து போடாமலேயே விட்டார்கள்.
இதனால் பாதிப்பு யாருக்கு ?
நமது சந்ததி ஊனமாக வர வாய்ப்பிருக்கிறது.
இவர்கள் வெளியிடும் மலிவான செய்தி குழந்தைகளின் நலத்தையே பாதிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தினால் பல ஆராய்ச்சிகளால் செய்யப்பட்ட பின்னரே இத்திட்டம் சமூதாய அளவில் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 196 குழந்தைகள் சாதாரணமாக இறப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
காக்கை உட்கார பனைம்பழம் விழுந்த கதையாக... இத்திட்டத்தினாலேயே இறந்ததாக பரபரப்பு செய்தி வெளியிடுகிறது.
இது போலவே இன்றும் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்து வெளியிடும் முன்னர் சுகாதாரத்துறையை அல்லது ஒரு குழந்தை நல மருத்துவ வல்லுனரை அனுகியதா என்று கேட்டுப்பாருங்கள். இருக்காது....
அவர்களுக்கு பரபரப்பு செய்திகள்... வேண்டும். அரசியலை நோக்கோடு நல திடட்த்தை பார்ப்பது. இந்த ஆட்சி வந்தாலும், கழகங்கள் வந்தாலும் இத்திட்டம் செயல் படப்போகிறது. மலிவான தேர்தல் பிரச்சாரம் போல இதையும் ஆக்கிவிட்ட்து இன்றய ஊடகங்கள். இவர்களுக்கு சமூக அக்கறை இருந்தால் இது போன்ற செய்திகள் இனிமேல் வெளிவராது.


No comments:
Post a Comment