சுமார் சுதந்திரம் வாங்கி 62 ஆண்டுகள் கழித்து சமச்சீர்கல்வி பற்றி பேச ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
பல விவாதாங்கள்.
தாய்மொழி வழிக்கல்வி என்பதே காணாமல் போய்விட்ட நிலை ?
வியாபாரமான கல்வி !
சாராயத்தொழிலைவிட இலாபகரமாண தொழில் கல்வி ?
பணமிருந்தால் என்ன படிப்பு வேண்டுமானாலும் கிடைக்கும்?
குறிப்பிட்ட 2 விழுக்காடு உள்ள சமூகத்தினர் நல்ல வசதியோடு உயர் அமைப்புகளிலும் ,பெரும்பான்மையாக உள்ள அடித்தள மக்கள் வறுமை மற்றும் அறியாமையில் உழல்வதும் ஒரு வன்முறையல்லவா ?
இந்திய ஜனநாயகம் இப்படித்தன் இருக்கிறது ?
குறிப்பாக சமச்சீரற்ற சமூகத்தில் பல உரிமைகள் பெருபான்மை சமூகத்தில் இன்றும் மறுக்கப்பட்டே வருகிறது.
உயற்கல்வி/வேலை போன்றவற்றில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இன்றும் தொடர்வது அதிசயமில்லை. ஏனென்றால் அம்பேத்கர் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் “மூளையுழைப்பை பார்ப்பனர்களும் உடலுழைப்பை அடித்தட்டு கீழ்த்தட்டு மக்களுக்கும்”””’’’” எழுதப்படாத சட்டம் போல இந்து சமூகம் மக்களின் மீது திணித்துள்ளது. ஊர் சேரி,பள்ளன் பறையன் பார்ப்பான் போன்ற கருத்தியல்கள் இந்துமதம் வழியாக மக்களை நெறிப்படுத்தும் முறையை ஒரு பேட்டை ரௌடி செய்வது போல் சாதியம் செய்து வருகிறது.
சாதியம் மக்களை குறிப்பாக உழைக்கும் மக்களை தனித்தனி சமூக்குழுக்களாக இன்றும் பிரித்துவைத்துள்ளது. சாதியத்தின் அடிப்படை இந்துமதம். சாதியத்தை வலுப்படுத்த ஒழுங்குபடுத்த கடவுளர் தத்துவங்கள், சடங்குகள் பழக்க வழக்கங்கள் குறிப்பாக செல்லவேண்டுமானால் அகமணமுறை அமைப்பு கெட்டித்தட்டி பாறைப்போல் இருக்கிறது.
இந்த அமைப்புதான் அன்று ஏகலைவன், நந்தன்களுக்கு கல்வியை உரிமையை மறுத்தது.
உழைக்கும் வர்கத்தில் இருந்து வந்த ஏகலைவனுக்கு கட்டைவிரலை காணிக்கையாக கேட்ட கும்பல்களின் வழித்தோன்றல் இராமகோபாலன், சோ இராமசாமி,சங்கராச்சாரி, இராஜகோபாலாச்சாரி வகையாராக்கள்.
இராமகோபாலன் அவர்கள் சமச்சீர் கல்வியை செயல்படுத்தும் வழியில் நாத்திகத்தை திணிக்க அரசு முயல்வதாக கூறியுள்ளார்.
தந்தை பெரியார், மூடநம்பிக்கை, கிருத்துவர்களின் வருகை, அன்னை தெரசா போன்ற பாடங்களை இடம் பெறச்செய்வதின் மூலம் வன்முறையை மக்களின் மீது தினிப்பதாக இந்து முன்னணி இராமகோபாலன் கூறியுள்ளார்.
சமச்சீரற்ற சமூகத்தை பற்றியும், அதன் சீரழிவுகளான தீண்டாமை,சாதி ஒதுக்கம்,சாதிக்கொரு நீதி போன்ற அநீதி பண்புகளைக் கொண்ட இச்சமுகத்தை எதிர்த்துப்போராடிய பெரியார் வன்முறையாளரா?
ஊர் சேரி என பிரித்துள்ள சமூக ஒழுங்கை ஆதரிக்கும் இந்து முன்னணி என்ன ஆர்எஸ்எஸ் பயிற்சியில் தர்பைப்புல்லை வைத்தா பயிற்சியை செய்கிறது?.
பாபர் மசூதியை இடித்து நாட்டில் அமைதியின்மை செய்தது யார்?
குஜராத்தில் மோடி இஸ்லாமியர் மீது வன்முறையை கட்டவிழ்த்து பல்லாயிரம் மக்களை கொன்றது யார், நாத்திகர்களா?
ஆன்மீகப்போரில் கழுவில் ஏற்றியது யார்?
புத்த விகாரங்களை எல்லம் இடித்தது யார் ?
இந்து சமூகம் பற்றிய கருத்துக்களை கூறிய கலைஞரின் தலையை கொய்யச் சொன்ன சாமியார் யார்?
மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்தப்படாமல் செயல் பட்ட குழுகள் எது? வட மாநிலங்களில் மண்டல் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டியது யார்?
பொது உரிமையற்ற சமுகத்தை எதிர்த்து பொது உரிமைக்காக போராடிய பெரியார் வன்முறையாளரா?
இந்திய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியில் வழங்கிய கிருத்துவ அமைப்புகளின் பங்கு அளப்பறியது.
சாதிக்கொரு கல்வியை வழங்கிய காலத்தில் கிருத்துவத்தின் பங்கால் தான் சிறு ஓளிக்கீற்றாக சேரிகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சென்றதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் அக்கிருத்துவ அமைப்பே இந்துமத தாக்கத்தால் சாதிய வலையில் மாட்டி சாதிய பாகுபாட்டை தன்னுள் கொண்ட்து வேறு செய்தி.
சமநிலையற்ற சமூகத்தை கல்விதான் உடைகும் சிறுப்பணியை செய்யப்போகிறது.
அதுவும் சமச்சீரற்ற சமூகத்திற்கு சமச்சீர் கல்வி தேவையா என்பதே இந்துமதவாதிகளின் நோக்கம்?
பார்ப்பான் வசதியாக ஐஐடி, எல்ஐசி,பேங்க் என்று உயர்நிலையிலும், பறையன் பறையடிக்கவும், உழைக்கும் மக்கள் அவனவன் வேலையை செய்ய வேண்டும் இதுதன் அவாளின் நோக்கமும் கூட..
இவற்களின் கோவமும் அதுவே?
தீண்டாமையை, கடவுளை கேள்விக்குள்ளாக்கும் இக்கல்விமுறை தேவையா என்பதே இராம கோபால்களின் வருத்தம்.
ஆனால் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு முன்னமே இந்து மத பாம்பின் நச்சுப்பல் காட்ட ஆரம்பித்துவிட்டது.
சமச்சீரற்ற சாதிய சமூத்ததில் அமைதி இருக்காது.
சமச்சீர் கல்வி சாதிய கருத்தியலை உடைக்கும் பணியைச் செய்தால் நாம் அதை வரவேற்போம்.




1 comment:
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இந்த ராமகோபால நரிகளிடம் ஏமாறக்கூடாது.
கடவுளுக்கும் மக்களுக்குமிடையே இந்த மாமாக்கள் எதற்கு ?
நடமாடுங் கடவுள் என்ற அளவிற்குத் திமிர் பிடித்தலைந்த கேடு கெட்ட சுப்பிரம்ணியனைத் திரும்பவும் கடவுளாக்கப் பார்க்கின்றனரே!
இந்திய அரசியல் சட்டப்படி ராம்கோபாலனெல்லாம் சிறைக்குள்ளே தள்ளப் பட வேண்டாமா?
இந்த ஆளின் பாதுகாப்பிற்குத் தினமும் எவ்வளவு செலவு தெரியுமா?
Post a Comment