பிள்ளையார் பால் குடித்தது போல சிக்குன்குனியாவுக்கு கருவாடு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மர்மக்காய்சல் என்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருவது அறிந்ததே. அது சிக்குன்குனியாவா, டெங்குவா அல்லது லெப்டோஸ்பைரோசிசா என்ற கேள்விகள் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது.
சென்னை போன்ற மாநகரங்களில் கூட கருவாடு விற்பனை அதிகரித்துள்ளது. அதுவும் நெத்திலி கருவாடு குணமாகும் என்ற எண்ணம் கருத்தியலாக  மக்களை ஆட்கொண்டு வருகிறது.
2004ம் ஆண்டில் பெருந்நோய்த்தாக்கமாக சிக்குன்குனியா இந்தியாவையே ஆட்டிப்படைத்தது.இந்நோயை கண்டறியவே சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் பல மாவட்டங்களில் பரவி விட்டிருந்தது. பொதுவாகவே வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையே இல்லை. ஆனால் அறிகுறிகளை வைத்து மருத்துவர்கள் சிகிச்சை செய்வார்கள்.
சிக்குன் குனியாவின் அறிகுறியாக பார்த்தால்  திடீர் காய்ச்சல், உடம்பு வலி, மூட்டுக்களில் வலி முக்கியமாக எலும்புகள் இணையும் பகுதியான சிறிய மூட்டு இணைப்பு பகுதிகளில் வீக்கம் தோன்றும். வயதாக வயதாக இப்பாதிப்பு  பல வாரங்களுக்கு/மாதங்களுக்கு தொடரலாம். நாம் ஏற்கனவே பார்த்த்து போலவே அறிகுறிகளை வைத்து செய்யும் சிகிச்சையாக பாரசிட்டமால் பரவலாக கொடுக்கப்பட்டு வருகிறது. வலிபோக்கியாக செயல் படும் பர்ரசிட்டமால் நல்ல பலனையே தருகிறது.ஆனால் கருவாடு குணமாகும் என்ற கருத்தில் உண்மையில்லை. இதை தமிழகத்தின் பொதுசுகாதார இயக்குநர் டாக்டர் இளங்கோ கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்படி பிள்ளையார் பால் குடித்ததான கதையாகத்தான் இதுவும். கருவாடு வியாபாரிகள் வேண்டுமானால் இதில் பயன் பெறுவார்கள். சொல்லப்போனால் கருவாட்டில் உடலுக்கு கிடைக்கும் கலோரியும் மிகமிக்க் குறைவே.
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர், பிண்ட தைலம் நல்ல பலன் தருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பிள்ளையார் பால் குடித்த கதையாகவே இப்போது சிக்குன்குனியாவுக்கு கருவாடுவிற்பனையும் ஒரு நிறுபிக்க முடியாத செய்திகாகவே ஆகிவிட்டது.

தமிழகத்தில் இது போன்ற வதந்திகள் உண்மைக்கு மாறான செய்திகள் அடிக்கடி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தவே செய்கிறது.
ஒன்றுமட்டும் உண்மை. பிள்ளையாரும் பால் குடிக்கப்போவதில்லை ,கருவாடும் சிக்குன்குனியாவை குணமாக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment