தோழர் ஒழுக்கமானவர்... எல்லாம் உண்டு...
வீட்டில் பெருமாள் சாமிக்கு இடும் குங்குமம்
மார்க்சின் நெத்திக்கும் தொற்றும்.
ஒன்னுமில்ல தோழர் இது எங்க வீட்டுல
இவங்கல திருத்த முடியாது..
சரி சரி..
எகாதிபத்திய எதிர்ப்புக்கூட்டம் வாங்க போகலாம் என்று கிளம்பும் தோழர்...
·
குடிசையில்
வண்ணக்கொடிகள் பறக்கும்
சாதியத்தின் கொடிக்கயிற்றில்
கட்சிக்கொடியில் பறக்கும்....
இலக்குகள்..
சில சட்டமன்ற உறுப்பினர்கள்...
டெல்லியில் தோழமைப்பேச
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
அப்போதுதான் அமெரிக்க வல்லாதிக்கத்தைப் பேசலாம்...
·
செங்கொடிகள்
இப்போதெல்லாம் முதலாளித்துவம் வீசும்
காற்றுப் போக்கில்தான் பறக்கும்.
போனஸ்.
கூலி..
கடையடைப்பு...
உண்ணாவிரதம்....
பட்டைநாமம் திலகமிட்ட போராட்டம்...
திருப்பதி மொட்டைப் போராட்டம்....
என கீழிரங்கும்
தோழமை இயக்கங்களின் நிகழ்வுகள்...
போராட்டத்தின் நீட்சியாக
காந்தியத்தின் கூறுகளை உள்வாங்கும்..
·
செங்கொடி இயக்கங்கள்
தேர்தல் பாதையில் வண்ணமாறுகிறது....
காவி நிறத்தில் பறக்கிறது..
அமெரிக்க டாலர் எதிர்ப்பு....
போராட்டம் முடிந்த கையோடு தோழமை
பெப்சி குடித்து தாகம் தணிக்கும்.
உடம்பில் பூனூல் மறைய...
சாதிய கூறுகள் இரத்த அணுக்களில் சுழல
தோழமை சிரிக்கும்...
தீண்டாமை மெல்ல மெல்ல மறையும் தோழர்...
மற்றப்படி அவனுங்க அப்படித்தான்
மாட்டுக்கறி சாப்பிடும் அவனுக்கு
இதெல்லாம் புரியாது தோழர்...
ஆனா கடைசியில் நம்ம பக்கம் தான் வரவேண்டும்...
·
அம்பேத்காரை...
பெரியாரை...
குட்டி முதலாளித்துவ சிந்தனையாக பார்க்கும்
தோழமை....
வீட்டில் அமாவாசை கும்பிட்டு..
செத்துப்போன அப்பனுக்கு
திதி கொடுக்கும்....
சாவுக்கு பறை மோளம்..
அதுவா தோழர் நம்ம குடும்ப வழக்கம்...
வீடுக்கார அம்மா சொல்லுவாள்
சமைஞ்ச பொண்ணுக்கு தள்ளிப் போடாம
நம்ம வகையாறாலிலே மாப்பிளை பார்க்கணும்...
பொருத்தம் முக்கியம்....
தோழர் சொல்லுவார்....
அவங்களை மாற்ற முடியாது..
·
பெரியாரும்
அம்பேத்காரும் தனித்தனிப்பாதையில்
பயணிப்பதால்தான்
சீனத்திற்கு முன் ஆரம்பித்த செங்கொடி
இயக்கங்கள்....
காவிக்கு மாறுகிறது..
·
ஒரு நாள் தோழர் செத்தேப் போனார்..
அவரின் நெற்றியில்
திரிசனம்....
பறை மேளச் சத்தத்தில்
அவரின் மேல்
செங்கொடி போர்த்தப்படுகிறது...
·

No comments:
Post a Comment