
சூடுபட்டு சூடுபட்டு இடைத்தேர்தலை சந்திக்கிறார். ஜெயிக்க என்ன வேண்டுமானாலும் பேசுவார். இதில் ஒன்று தான் ஈழம். ஈழமுழக்கத்தை கொஞ்சம் வால்யூம் மியூட்டில் வைத்துள்ளார். பார்ப்பனியம்,இந்தியதேசியம், இந்துதேசியம்,ஈழஎதிர்ப்பு,சமூக நீதி எதிர்ப்பு,தமிழ்வழிக்கல்வி எதிர்ப்பு போன்ற முக்கிய கோட்பாடுகளை இரத்தித்தில் ஊறியவர் ஜெயா. இவருக்காக திமுகவை வக்காளத்துவாங்குவதாக பொருள் கொள்ளக்கூடாது.
திருச்செந்தூரில் இன்று பிரச்சாரம். இன்னும் வந்தவாசி தொகுதி பாக்கி.. ஆனால் காஞ்சிபுரம் களைகட்டிவிட்டது. ஆம் அவர் காஞ்சியில் தங்கித்தான் பிரச்சாரம் செய்யப்போகிறார். அதற்காக ஒரு நட்சத்திர ஓட்டலையே புக் செய்து இருக்கிறார்களாம். யாரும் அவர் வந்து போகும் வரை தங்கக்கூடாதாம். ஏனென்றால் அடிமைகளின் காற்று தன் மேல் விழக்கூடாது, படக்கூடாது. வியர்வையின் வாசனை தெரியாதவர் இப்படித்தான் நடப்பார். ஒரே இரவில் 11/2 இலட்சம் தமிழர்களை பணியிடை நீக்கம் செய்தவர் அல்லவா? இவர்.
சேது கால்வாயிக்காக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இன்று வேண்டாம் என்று எதிர்கிறாரே ? என்ன சொல்ல?
பிராபாகரனை கொண்டுவந்து தூக்கிலவேண்டும் என்று கூறியவர் ஈழகானத்தைப் பாடுகிறாரே? இதுதான் பார்ப்பனியம், சங்கராச்சாரியாரின், காஞ்சி தேவநாதனின் வாரிசல்லவா ஜே.
இப்படித்தான் வாக்குகளை சேகரிப்பார்..
வாய்ப்பிருந்தால் தனித்தீவில் தங்கி(இதற்குதான் கச்சத்தீவை கேட்கிறாரோ) அரசியல் நடத்துவார்?. மார்க்சிஸ்டுகள் தான் பதில் அளிக்க வேண்டும்.
சிருதாவூர் பங்களாவின் இரகசியம் கூட்டணி தர்மத்தின்படி மார்க்சிஸ்டுகளுக்கே வெட்ட வெளிச்சம்.
No comments:
Post a Comment