இன்றைய தேவையே தெலுங்கானா... வட தமிழ்நாடு எப்போது....



ஆந்திரமே தீயாய் வெடித்துள்ளது. தெலுங்கானா போராட்டம் வெடிக்க மத்திய அரசு பணிந்தது... மீண்டும் தெலுங்கானாவுக்கு எதிராக மீண்டும் மற்றப் பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது(உபயம் காங்கிரசே). மாநிலத்தில் பரவலான வளர்ச்சி நலமானது.வளமானது. ஆனால் குறிப்பிட்ட பகுதி மட்டும் அசூர வளர்ச்சியிலும் மற்ற பகுதிகள் அழுகிய நிலையிலும் இருப்பதே தெலுங்கான கற்பிக்கும் பாடம். அண்​மை​யில் உரு​வாக்​கப்​பட்ட உத்​த​ராஞ்​சல் உள்​ளிட்ட சிறிய மாநி​லங்​கள் மிக வேக​மாக வளர்ச்சி பெற்று வரு​கின்​றன.​ தனிமாநில கோரிக்கைகள் இந்திய சட்டதிட்டத்திற்கு உட்பட்டே இருக்கும். இது தனிநாடு கோரிக்கையின் துவக்கமாக பார்க்கக்கூடாது. இந்த ஏக இந்தியா பிரிடீஷ்காரன் வருவதற்கு முன் இருந்ததா? இல்லையே 108 நாடுகள்? இருந்ததே. இப்போது நாடாக? இல்லையா?. வசதிக்காக வளர்ச்சிக்காக பிரிப்பதில் தவறில்லை. சாதிய சமூகமாக உள்ள இந்திய சமூகம் பல பகுதிகளில் பல தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட குழுக்கள் தனிதீவுகளாகவே கேட்பாரற்று போனதின் விளைவே தனி மாநில கோரிக்கை. மாநில இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

இது போலவே தமிழகத்தில் மருத்துவர் இராமதாஸ் அவர்களாலும் மற்றும் இறையன் போன்றோர்களால் வட தமிழ்நாடு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இராமதாஸ் ஓட்டு அரசியல் நட்த்த அக்கோரிக்கையை கைவிட்டார்.

ஆனால் இராமதாசோ நேற்று செய்தியாளர்களிடம் தமி​ழ​கத்தை இரண்​டா​கப் பிரித்து இன்​னொரு மாநி​லம் உரு​வாக்​கு​வ​தால் நன்​மை​தான் ஏற்​ப​டும் என்​றார் . இது குறித்து அவர் சென்​னை​யில் சனிக்​கி​ழமை கூறி​ய​தா​வது:​
ஆந்​தி​ரத்தை இரண்​டா​கப் பிரித்து தெலங்​கானா மாநி​லம் உரு​வாக்​கு​வதை பா.ம.க.​ ஆத​ரிக்​கி​றது.​ எங்​கள் கட்சி ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யில் இருந்​த​போது,​​ தனி தெலங்​கானா மாநி​லத்தை உரு​வாக்​கு​வது பற்றி குறைந்​த​பட்ச செயல் திட்​டத்​தி​லேயே வாக்​கு​றுதி அளிக்​கப்​பட்​டி​ருந்​தது.​ அப்​போது அதைப் பயன்​ப​டுத்​திக் கொள்ள தெலங்​கானா ஆத​ர​வா​ளர்​கள் தவ​றி​விட்​ட​னர்.​
தெலங்​கானா மட்​டு​மின்றி,​​ மக​ராஷ்​டி​ரத்​தில் விதர்பா உள்​பட இப்​போது எழுந்​துள்ள தனி மாநில கோரிக்​கை​கள் அனைத்​தும் மத்​திய அர​சால் பரிசீ​லிக்​கப்​பட வேண்​டும்.​ சிறிய மாநி​லங்​களே நிர்​வாக வச​திக்கு நல்​லது.​

இன்று அமைதிகாக்கும் மாநிலங்களில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. மய்ய அரசு மாநில உறிமைகளில் கையை வைக்காமல் மக்களின் உறிமைகளை பரிசீலிக்க வேண்டும். இப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாவிடில் ஏக இந்தியா சந்தேகமே.

1 comment:

suki said...

telengana is a different story,
i dont find any reason to divide tn, water resources are a problem in my (svga, ramnad ) district, though chennai is capital, madurai is agricultural capital ,instead if you want really generalised development, the government hqs of various department can be shifted to various cities, this will reduce the congestion of chennai as well as develop other areas. power devolution is the best solution.

Post a Comment