
இப்போது இலங்கையில் அடிக்கடி சிங்கள அரசியல்களில் காமெடி பீஸ்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஒருவர் பொன்சேகா. மற்றொருவர் பக்சே.
இட்லர்களின் வழித்தோன்றல்களின் உச்ச வடிவம் அவர்கள்.
இராணுவ ஜனநாயகம் வரம்பு மீரும் போது இராஜநாகம் பாம்பை சாப்பிடுவது போல இருவரும் படுகலைகளை பற்றி வித விதமான கற்பனை புனைவுகளை கூறிவருகிறார்கள்.
காரணம் அரசதிகாரம்.
இப்போதைய காமெடி பீஸ் இதுதான் :
இலங்கையில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு படைத்தளபதிகளே காரணம் என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபட்சே கூறியுள்ளார்.
இலங்கையில் 2006 முதல் 2008 வரையிலான காலத்தில் மட்டும் 16 பத்திரிகையாளர்கள் படுகொலை என்கிறது செய்திகள்.
என் பதிவின் வண்ணமும் மாறுகிறது.
பச்சோந்தி இடத்திற்கேற்றார் மாறுவது போல பக்சே குடும்பத்தினர் புத்த வேடம் பூணுகின்றனர்.
நான் தான் இந்நூற்றாண்டின் நவீன புத்தர் எனலாம். இலங்கையில் 1000 ரூபாயில் அவரின் படத்தை வெளியிட்டு புளாங்கிதம் அடைந்தத்தைப் போல புத்தர் தலையை வெட்டி எடுத்து இராஜபக்சே தன் உருவ தலை வடிவ சிற்பத்தை பொருத்தலாம்.
அவரின் சகோதரின் பொன்மொழி இலங்கையில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு படைத்தளபதிகளே காரணம். புத்தர் பிறந்திருக்கிறார் பக்சேவடிவில்.
அரசியலில் பணத்தேவைக்கு புலிகளிடம் கூட உதவி பெறுவேன் என்பார் கமேண்டோ பொன்சேகா.
பிரபாகரனின் தாய் தந்தையரை சேர்த்துக் கொள்வேன் என்று இவர் கூறுவார். இந்த புலிகேசி.
செத்து போனவர்கள் மன்னிக்கவும் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மலர்களின் வருடலாலேயே இறந்து போனார்கள் என்று சொல்வார்கள்.
அப்போது ஐநாவும் உலக சமுகமூம் தலையாட்டும். ஆம் என்று சொல்லும்.
கேட்க நாம் இருக்கிறோமே?
இலங்கை இராணுவ அரசியல் அதிகார மோதலில் உண்மைகள் வெளிவரவே செய்கிறது.
No comments:
Post a Comment