செருப்படி பெற வேண்டியவர்கள் இன்னும் கருவறையில் இருக்கிறார்கள்.


குடுமிபுகழ் தேவநாதன் காஞ்சிபுரத்தில் வழக்கு மன்றத்திற்கு கொண்டு வரும் போது மக்கள் மன்றத்தினரின் செருப்படி வழங்கப்பட்டது. அவாள்களின் புனிதம் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டு வருகிறது. பார்ப்பனர்களே கருவறையில் நுழைய அத்தாரிட்டி பெற்றவர்களே என்கிறது மனு நீதி. அதனால் தான் கருவறையில் கருவூட்டம் கொடுக்கும் புனிதமான பணியை தேவநாதன் செய்து வந்துள்ளார். காஞ்சிபுரம் புகழை சில ஆண்டுகளுக்கு முன்னர் அவாள்களின் ஜெயேந்திரர் பரப்பினார். படு கொலை செய்யப்பட்ட சங்கரராமன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஜெயேந்திரர் மீது சுமத்தினார். செய்தி ஊடகங்களில் நடிகைகள், பெண்கள் ஊடான தொடர்புகள் ஜெயேந்திரர் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின. ஏற்கனெவே சன்னியாசம் பிடிக்காமல் சொல்லிக் கொள்ளாமல் ஓடிய சங்கராச்சாரியை வெங்கட்ராமன் அய்யங்கார் தலைக் காவேரியின் தண்ணீரைத் தெளித்து புனிதப்படுத்தி கூட்டிக் கொண்டு வந்தது பார்ப்பனியம். கற்பு, ஒழுக்கம்,பதிவிரத் தன்மை போன்ற வாழ்வியல் கூறுகளை சாமி, சடங்கு மூலம் பார்ப்பனியம் நமக்குச் சொல்லும். ஆனால் அதை அப்பட்டமாக அவர்களை மீறச் சொல்லும்.

கருவறையில் புரோகிதம் பன்னும் ஜாபுக்கு பார்ப்பனன்தான் முழு குவாலிபைடு பர்சன் என்பாறர்கள். இந்த தகுதி நிலை அவர்களுக்கு மட்டுமேதான் வரும். உழைக்காமல் நோம்பு கும்பிடும் பணியை (தேவநாதன் பணியை) யார்தான் விட்டுக் கொடுப்பர். இதற்காக உச்சமன்ற நீதி மன்றத்தையும் தன் குடுமியால் பூனூலால் கட்டவும் செய்யும் இந்த பார்ப்னியம். இந்த கூத்தை பார்த்த பெரியார் சாமியின் பெயரால் நடக்கும் அட்டுழியங்களை எதிர்த்தார்.

ஆனால் அவாளுக்கு எல்லாம் தெரியும் கடவுளர்கள் எல்லாம் டுபாகூர் என்று. அதனால் தான் கடவுளின் சாட்சியாக கருவூட்டத்தை கருவறையில் செய்கிறார்கள். எனென்றால் கருவறை புனிதமானது. அது போல கருவூட்டலும் புனிதமானது. உண்மையே மனு நீதி சொல்கிறது ஆம் பார்ப்பனன் மற்ற சாதி பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். இதை அனுமதிக்கிறது அவாளின் லா புக்கான மனூஸ்மிருதி. தேவநாதன் போன்றார் இப்புனிதப்பணியை இறையியல் நோக்கோடுதான் செய்கிறார்கள். பெரியார் எல்லாவற்றையும் மீறச் சொன்னார் கடவுள், சம்பிராதயம், சடங்கு,கோவில், பூசை போன்ற வற்றை மீறச்சொன்னார். ஆனால் இவ்வேளையை பார்ப்பனர்கள் செய்கிறார்கள். பார்ப்பன குழந்தைக்கு அம்மை போட்டுவிட்டால் கோவிலில் கொண்டு சென்று சடங்கு செய்வதில்லை. நல்ல குழந்தை நல மருத்துவரை ஆண்டிபயாடிக் கொடுத்து சிகிச்சை செய்வார். ஆனால் நம ஆளு சாமி குத்தம் என்று கூறி கோவிலில் சென்று மந்திரிக்கும் பழக்கத்தை இன்னும் விடவே இல்லை. இதை மீற அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் இயக்கத்தை நடத்தினார்கள். சாதியத்தை மீறுவது கடவுள் தன்மையை உடைக்கும், சாதியம் தான் அகமண முறையை கட்டிக்காக்கிறது. சாதியத்தின் வேற்களாக சாமி, சடங்குகள்,சம்பிரதாரம், கடவிளர்கலின் விழாக்கள் போன்றவைகள் இருக்கிறது.

இதை நாம் உணராதவரை அவாள்களின் வழித்தோன்றல்கள் பார்ப்னிய பணியை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

செருப்படி பெற வேண்டியவர்கள் இன்னும் கருவறையில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment