தோல்வி உறுதியாகிய பின்னரும் தேர்தலில் ஜெயா!!!!!!.

வந்தவாசி திருச்செந்தூர் இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் இனிதே துவங்கியுள்ளது. இத்தேர்தலில் பணமும் அதிகாரமும் ஆட்டிப்படைக்கப்போகிறது ஜனநாயகத்திற்கு இடமில்லை என்ற ஜெயலலித்தா, தவிர்க்க இயலாமையால் தேர்தலில் குதித்துள்ளார்.பாமகவோ ஓ (0) பிரிவை பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அவரின் முடிவு சில காலங்கலாக்கவே சுழியில்தான் (0) முடிகிறது.

சுழியத்தை பார்த்த ஜெயாவோ இம்முறையும் தேர்தல் புறக்கணிப்பால் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தப்படுவோம் என்ற நிலையில் தேர்தலில் பங்கெடுப்பு நிலையை எடுத்துள்ளார். ஆனால் உண்மை என்னவோ தோல்வி உறுதியாகிய பின்னரும் அவர் சந்திக்கும் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்.

இவரின் ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களில் குறிப்பாக ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். அவர் பயன்படுத்திய அத்துனை சக்திகளையும் பல மடங்கு திமுக பயன்படுத்தப் போகிறது என்பதை ஜெயா நன்றாகவே அறிந்துள்ளார்.

அதிமுகவிற்கு தேர்தல் வெற்றிக்கான புள்ளிகள் மிக மிக குறைவாகவே உள்ளது.

· பலவீனமானக் கூட்டணி

· உறுதியில்லாத தலைவர்கள்

· திட்டிவிட்டு திட்டிவிட்டு கூட்டணி சேரும் மார்க்சிஸ்டுகள்

· வார்த்தை ஜாலத்தை மட்டும் மூலதனமாக கொண்டுள்ள வைகோ

· அமைதி யாகம் மேற்கொள்ளும் இராமதாஸ்

· கூட்டணி ஒழுக்கத்தை மீறும் கட்சிகள் –போன்ற கூறுகள் தோல்விக்கான காரணிகளாக அதிமுக கொண்டுள்ளதை யாரும் மறுக்கமாட்டார்கள்

திமுகவின் கூட்டணி பலங்களோ கூடுதல்:-

· ஒரு ரூபாய் அரிசி

· இலவச கேஸ் அடுப்பு

· இலவச காப்பீட்டுத் திட்டம்

· அதிகாரம்

· பணம்

· இலவச திட்டங்கள் ஓடுப்போடப் போகும் சாமானிய வாக்காளர் வீட்டினுல் உட்கார்ந்துள்ளதை திமுக எதிர்ப்பாளர் கூட ஒத்துக் கொள்வார்.

இன்னும் சில மாதங்களில் சட்ட மன்ற பொது தேர்தலுக்கு இந்த இடைதேர்தல் முன்னோட்டமாகவே இருக்கப் போகிறது.

இந்த தேர்தல் எந்த வித படிப்பினையை ஜெயாவுக்கு சொல்லிக் கொடுக்கப்போகிறதோ?

No comments:

Post a Comment