
ஒரு வழியாக லிப்ரான் குழு அறிக்கை நாடளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பிக்க நீதிபதி லிபரான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக நீடித்த இந்த விசாரணையின் அறிக்கையை நீதிபதி லிபரான், கடந்த ஜூன் 30ஆம் தேதி மத்திய அரசிடம் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 68 பேரில், பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான முரளி மனோகர் ஜோஷி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங், விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், கோவிந்தாச்சார்யா, மறைந்த விஜயராஜே சிந்தியா, விநய் கத்தியார், உமா பாரதி மற்றும் காவல் துறை ஐ.ஜி ஏ.கே.சரண் மற்றும் முதன்மைச் செயலாளர் சாக்சேனா ஆகியோரும் அடங்குவர்.
இதுபற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் நாடாளுமன்றத்தில் வெளியிடும் முன்னரே வெளியாகியது. இந்நடவடிக்கைக்கு பொறுப்போற்று அமைச்சர் சிதம்பரம் பதவி விலக ஜெயலலித்தா கோரியிருந்தார்.
இச்செய்தி வெளியானதில் ஜெயல்லித்தாவுக்கு பெருங்கோவம் கொண்டார்.
கோபத்தின் காரணம் மசூதி இடித்த்து பற்றி இல்லை. எப்படி செய்தி லீக்?! ஆனது என்பதைப்பற்றித்தான்.
அப்பட்டமான பார்ப்பனியக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் ஜெயலலித்தாவோ பிஜேபியின் கொள்கை வாரிசு.
ஆர் எஸ் எஸ் என்ற இந்து மதவா அமைப்பின் கொள்கை மூச்சு.
இதனால் பாபர் மசுதி இடிப்புக்கும் கூட... அப்போது தன்னால் இயன்ற உதவியாக சுமார் 2000 கரசேவைத் தொண்டர்களாக தன் விசுவாசிகளை அனுப்பிவைத்தார்.
தன்னை பார்ப்பனத்தி என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைவதாக சட்ட மன்றத்தில் பறைசாற்றினார்.
இக்கருத்துக்களையும் அப்படியே சட்ட மன்ற பதிவேட்டிலேயும் பதிவு செய்து பார்ப்பனப் பாசத்தைக் காட்டினார்.
லிப்பரன் அறிக்கையும் காலதாமதமாக சுமார் 17 ஆண்டுகள் வெளிவந்தாலும் அது லீக்கானதையே பெரும் பிரச்சனையாக பார்க்கிறார்.
சாதிய இழிவுகள் தொடர..
அகில இந்திய/இந்து தேசியம் முன்னெடுக்கும் அரசியலில் ஆர்வம்...
இந்துத்துவம்...
தாஉத்தமிழ் மொழி எதிர்ப்பு..
இட ஒதுக்கீடு எதிர்ப்பு..
தமிழர் நலன் எதிர்பு ....
ஈழ எதிர்ப்பு ( இப்போது காடும் முகம் பொய்முகம்)...
இவைகள் தான் இவரின் உயிர் மூச்சு...
லிப்பரன் குழு அறிகையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகளை பற்றிய கவலை இவருக்கு இல்லை.
எப்படி கசிந்த்து?
எப்படி கசியலாம்?
பாபர் மசூதி இடிப்பு என்ற புனித கடமையை செய்தவர்களை எப்படி குற்றவாளிகளாக அடையாளம் காட்டலாம் என்ற கருத்து உடையவரின் நோக்கம் இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்.
No comments:
Post a Comment