
மாவீரர் நாள் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது.
ஆனால் தமிழக அரசியலில் வழக்கம் போல ஈழப்பிரச்சினை பெறும் விவாத்த்திற்குள்ளாகிவிட்டது.
கலைஞரின் கண்ணீர் அறிக்கை விட...
ஜெயாவோ கலைஞரைச் சாடா அறிக்கைப் போர் துவங்கியுள்ளது.
ஜெயாவுக்கோ கடந்த தேர்தலில் இருந்தே ஈழத்தின் மீது காதல். கள்ளக் காதல். இது திடீர்க் காதல். கடிதம் எழுதிக்கொடுப்பவர்கள் வைகோ, நெடுமாறன் அவர்களும் தான்.
பிராபாகரனை இந்தியாவுக்கு கொண்டுவந்து தூக்கில் ஏற்ற வேண்டும் என்றார் இந்த ஈழதேவதை. சட்ட மன்றத்தில் தீர்மானம் இயற்றினார்.
இன்று ஈழத்தின் மீது மட்டற்ற காதல் ஜெயாவுக்கு.
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கண்ணீர் அறிக்கை?! வெளிட்ட கலைஞரை கண்டித்து ஆட்சியை கலைக்கச் சொன்ன ஜெயலித்தா குரலோ வேறு விதம்.
ஆனல் கலைஞரோ என் கண்ணீர் துளிகளை ஈழமக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.
வந்தது ஜெயாவுக்கு கோபம்.
அறிக்கைவிட
கலைஞர் கூறினார் “என் கண்ணீரின் அர்பணம் புலிகளுக்கும் சேர்த்துதான். அதில் பிராபகரனும் அடங்குவார் “ என்றார்.
கலைஞரின் ஆட்சியிலும் சரி ஜெயா ஆட்சியிலும் சரி ஈழத்தைப் பற்றி பேசினால் சிறைவாசம் தான். ஒரே வித்தியாசம்.
கலைஞர் ஆட்சியில் பேசினால் காலையில் கைது மாலையில் விடுதலை.
ஆனால் அம்மா ஆட்சியில் தடா, பொடா, எஸ்மா,டெஸ்மா சட்டங்கள் பாயும்.
இன்று மாவீரர் தின போஸ்டர்கள் ஊரெல்லம் ஒட்டலாம்.
ஆனால் ஜெயா ஆட்சியில் நிலை...
அண்ணன் வைகோவையும், ஈழ அத்தாரிட்டி நெடுமாறன் அண்ணனையும் தான் கேட்க வேண்டும்.
1 comment:
இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைகோ போன்றவர்கள் தங்களது சொந்த லாபத்திற்காக கருணாநிதி எதிர்ப்பு அரசியலாக்கி விட்டனர்.
Post a Comment