இலங்கையின் ஆயுத குவிப்பு தமிழர்களை மட்டும் குறிவைத்தா ?



ஈழ மக்களை வழி நடத்திய புலிகள் அமைப்பை பயங்கர வாத அமைப்பு என்று கூறி சிதைக்கப்பட்ட்து. இதையே காரணம் காட்டி பல இலட்சக்கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டது. மன ரீதியான பயத்தை கொடுத்து தமிழர்கள் முள்வேளிக்குப் பின்னால் அடைக்கப்படுள்ளார்கள்.

இப்போரில் இந்தியாவின் ஆசியோடு ஆதரவோடே நடத்தப்பட்டது. சீன மற்றும் பாக்கிஸ்தான் இராணுவ பலத்தையும் அணி சேர்த்துக் கொண்ட சிங்கள பேரின வாத அரசு. இந்தியாவுக்கு (சோனியாவுக்கு ) ஒரு ஒரு நோக்கம் மட்டுமே. புலிகளை அழித்தொழிப்பது. அதுவும் பிரபாகரனை அழிப்பது. இதைத்தவிர வேறெதுவும் வெளியுறவு கொள்கை ஏதுமில்லை. இதற்காக பன்னாட்டு நெறிமுறைகளை மீறி இப்போரை வழி நடத்தியது. ஆனால் சிங்கள அரசோ நரித்தனமாக இந்தியாவின் எதிரிநாடுகள் என பாவிக்கப்படும் அண்டை நாடுகளான சீன பாகிஸ்தான் அரசுகளின் இராணுவ பலத்தையும் சேர்த்துக் கொண்டது.

தற்போது தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்கள் சீன இராணூவ வீரர்களின் முன்னிலையிலேயே நடந்துவருவதாக செய்திகள் வருகிறது. காஷ்மீர் பகுதிகளை கேள்விக்குறியாக்கியதைப்போலவே தென் பகுதிகளான தமிழகத்தை அச்சுறுத்த சீன பாக்கிஸ்தான் அரசுகள் இந்தியாவை பயன்படுத்த முயல்கிறது. கடல் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டிக் கொண்டு வர சீன அரசின் முயற்சிக்கு சிங்கள அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதற்காக பல கோடி மதிப்புள்ள இராணுவ தளவாடங்களை வாரி வழங்கிய சீனம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை குறுக்கத் தொடங்கியுள்ளது. இராணுவ கட்டமைப்பின் கூடிய கடற்படைத்தளத்தையும் கட்டிக்கொண்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது.

சரி. குறுகிய நோக்கத்திற்காக மூக்கை நுழைத்த இந்தியாவுக்கு குரங்கின் வால மாட்டிய கதைப்போலத்தான் ஆகிவிட்டது. கொத்து குண்டுகள், இராசாயன குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் எரி குண்டுகள்,தேர்மோபாரிக் குண்டுகள் போன்ற மனித பேரழிவை உண்டாக்கும் குண்டுகள் மக்கள் வாழிடங்கள் மீது வீசி சிதைக்கப்பட்டதை உலகமே பார்த்து மௌனித்தது. சிங்கள அரசின் இராணுவ குவிப்பு தமிழர்களை அச்சுறுத்த மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கு எதிரானதும்க்கூட. வெள்ளை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிங்கள ஊடகவியளாலர்களின் கதி என்ன? உண்மையினை கொண்டுவந்த மூத்த செய்தியாளர்களின் படு கொலையின் நோக்கம் என்னவாக இருக்கும்?

துப்பாக்கி குண்டு தமிழர்களின் உயிரைமட்டும் பதம் பார்க்காது. அரசுக்கெதிராக குரல் கொடுக்கும் சிங்கள மக்களை அச்சுறுத்தவும் பயன்படுதப் போகிறது.

தமிழக மக்களுக்கு புலிகள் அமைப்பு என்றால் சிங்கள மக்களுக்கு குரல் கொடுக்கும் எந்த அமைப்பானாலும் இந்நிலையே.

இராணுவம், நீதிமன்றம், போலிஸ், சட்ட திட்டங்கள் எல்லாமே அரசை பாதுக்காக்கவே. ஆயித குவிப்பு இப்போது ஈழமக்களை நோக்கியுள்ளது. உரிமைக்கு குரல் கொடுக்க அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் எழும் போது துப்பாகியின் வாய் மூடிக்கொண்டு இருக்காது...

No comments:

Post a Comment