.jpg)
நேற்று ஈழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். புலிகளின் அமைப்பு மாவீரர் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
இவ்வாண்டும் உலகமெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழக மக்கள் அரசியல் கட்சியினர் கொண்டு மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. ஈழப்போராட்டத்தை முன்னெடுத்து தலைமை தாங்கி வழி நட்த்திய புலிகளை ஏகாதிபத்திய துணையோடு பேரிணவாத சிங்கள அரசு விடுதலைப்புலிகளின் அதிகாரத்தை அதன் மையத்தை முற்றிலும் சிதைத்து விட்டது.
நவம்பர் 27-2009 அன்று பிரபாகரன் தோன்றுவார். அறிக்கை வெளியிடுவார். ஊடகங்களில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் புலிகளின் பெயரால் 15 பக்க அறிக்கை மட்டுமே வந்துள்ளது. இதற்கிடையே புலிகளின் தளபதி ராம் பெயரில் வந்துள்ள மாவீரர் தின அறிக்கை குழப்பத்தையும், பிராபாகரன் அவர்களையும் கொச்சைப்படுத்துவதாகவும் பழ.நெடுமாரன் அறிக்கையினையும் வெளியிட்டுள்ளார்கள்.
இக்குழப்பம் பல மாதங்களாகவே நிகழ்ந்து கொண்டு வருகிறது.
இமாவீரர்நாள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அரசின் துணையோடு சிங்கள பேரினவாத அரசு சீன மற்றும் பாக்கிஸ்தான் அரசுகளின் துணையோடு பெரும் அழிவு நடவடிக்கைகளை தமீழீழ மக்களின் மீது தொடுத்தது. இராஜபக்சே அரசின் எதிர்பார்ப்புப் போலவே புலிகளின் அமைப்பு மற்றும் தலைமை சிதைக்கப்பட்டது.
புலிகளின் மையம் சிதைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏகாதிபத்தியங்கள் கைக்கூலிகளாக சிலரை வாங்கி முரண்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டு வருகிறார்கள். நேற்றைக்கு வந்த அறிக்கைகளும் இதையே வெளிப்படுத்துகிறது.
3 இலட்சம் தமிழர்கள் முள் வேலிக்குப் பின்னால் சிறை அமர்த்தப்பட்டு ஈழமக்களின் வாழ்வும் முடக்கப்பட்டது.
சரியான விடுதலையை போராட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் தத்துவம் ஆயுதமாக...
ஏகாதிபத்திய எதிர்ப்பு...
தமிழ்த்தேசிய அரசியல்...
மக்களை மையப்படுத்திய அரசியல் அமைப்பு புதிய வரலாற்றைப் படைக்கப்போகிறது.
அப்போது புதிய பிரபாகரன்கள், மில்லர்கள், திலீபன்கள் தோன்றுவார்கள்.
ஏனென்றால் வரலாற்றை முன்னெடுக்கப்போகிறவர்கள் மக்களே..
மக்களின் அதிகாரமே பேரினவாத அரசியலை வீழ்த்தப்போகிறது.
அப்போது மாவீரர்கள் மக்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். தோன்றப்போகிறார்கள்...
பக்சேக்களின் இராணுவ அதிகாரங்கள் காற்றில் அப்போது பறக்கப்போகிறது...
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்
1 comment:
ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.
Post a Comment