டாலரைப் போற்றும் பிரதமர்.

செய்தியும்...கருத்தும்

/வாஷிங்டன்: அமெரிக்க டாலருக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. அதற்கு மாற்றும் கிடையாது. உலகளாவிய வர்த்தகத்திலிருந்து டாலரை நீக்குவது இயலாத காரியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்குத் தெரிந்து இப்போதைக்கு அமெரிக்க டாலருக்கு ஈடு, மாற்று எதுவும் கிடையாது. உலக வர்த்தகத்திலிருந்து டாலரை நீக்கிப் பார்ப்பது இயலாத காரியம்.

அமெரிக்க டாலருக்கு தற்போது தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதை வைத்து டாலருக்கு முடிவு கட்டி விட முடியாது.

சீனாவே கூட தங்களிடம் இருப்பு உள்ள 2.5 டிரில்லியன் டாலர் பணத்தை இன்னும் மாற்றாமல்தான் வைத்துள்ளனர். காரணம், அமெரிக்க டாலர் மீதான அவர்களது நம்பிக்கை.

இது அமெரிக்க டாலர் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையின் அளவாகும். பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இது தற்காலிகமானது, விரைவில் சரியாகும் என்றார் சிங்/

சுய பொருளாதாரம் எங்கே?

விவசாய தொழில் மேம்பாடு ?

எல்லாம் இலவச திட்டங்கள் அழுகிய உறுப்புகளை தேற்றுமா?

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் யாரை வளர்க்க ?

எல்லாம் டாலர் மயம். பிஜேபியாக இருந்தாலும் காங்கிரசாக இருந்தாலும் டாலரின் கயிற்றில் தான் கொடி பறக்கும்.

No comments:

Post a Comment