அந்த மே17- இந்த செப்டம்பர் 17


மொட்டை மாடியில்

வானத்தைப பார்த்து இருக்கிறேன்

தீபாவளி வெடிகள்

காதை பிளக்கின்றன.

ராக்கெட்டிகளின் பாய்ச்சல்

வானத்தில் வண்ணப்பொடிகளை தூவுகிறது.

சிரிப்பொலிகள்

கைத்தட்டல்கள்

மகிழ்ச்சி வெள்ளங்கள்.

இது செப்டம்பர் 17.

·

மே 17யை என் நினைவுகள்

வானத்தில் தேடுகின்றன.

தமிழகத்தில் தேர்தல் திருவிழா.

ஈழத்தில் மனிதர்களின்

கூக்குரல்கள்..

அங்கேயும் ராக்கெட்களின் பாய்ச்சல்களில்

பதுங்குக்குழிகள் சரிகின்றன

முனகல்கள் அடங்கிப்போகின்றன.

·

தமிழகம் தேர்தலின் உச்சக்கட்டச்த்தில்....

ஈழத்தை அடைந்தே தீருவோம்.

அமைதி வாழ்க்கைக்கு உத்திரவாதம்

அரசியல் கட்சிகளின் முழக்கங்களில்

ஈழமக்களின் ஓலங்கள்

அமிழ்ந்து போகின்றன.

·

மே17 இன அழிப்பு

தேர்தல் வெடிச்சத்தத்தில்

ஏகபோகமாய் நடந்தது.

·

செப்டம்பர்17

முள்வேளிக்கு பின்னால்

3 இலட்சம் தமிழர்கள் வாழ்க்கை

முடக்கப்பட்டுள்ளது.

·

இராஜபக்சேவுக்கு பொன்னாடை

அரசியல் கூத்து திரும்பவும்

புது ஒப்பணைகளுடன் அரங்கேறுகிறது.

·

தீபாவளி வெடிச்சத்தத்தில்

மொட்டை மாடியில்

வானத்தை பார்த்து இருக்கிறேன்

2 comments:

நாகா said...

October? :(

அன்புடன் நான் said...

நல்ல பார்வை. விரத்திக் கவிதை...வேறு என்னத்தச் சொல்ல

Post a Comment