ஜெயலலிதா சீரழிவு + கலைஞர் “இலவச அ (ரி)ரசியல்”= திமுக வெற்றி




இக்கணக்குதான் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க போகிறது. தீபாவளி விழாக்கால டாஸ்மார்க்கின் வருவாய் சுமார் 250 கோடி. அரசின் வண்ணச்சாரயத்தின் வருவாயே இலவச தொலைக்காட்சி, இலவச சமையல் எரிவாயு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி இன்னும் பிற.

அரசு சாராயக்கடை டாஸ்மார்க்கின் மூலதாரி ஜெயலலித்தா, அதை அப்படியே பன்மடங்காக பெறுக்கியவர் கலைஞர். ஒருக்கடைக்கு 50 கடை வீதம் தெருவுக்கு இரண்டு கடைகள். கைக்கெட்டும் தூரத்தில் சாரயக்கடை. ரேசன் கடையோ தூரத்தில். இது தான் ஜெயலலித்தாவின் பார்முலா.

நீண்ட கால திட்டங்கள் ஏதுமில்லை.

ஓட்டுக்கு காசுக்கொடுக்க மணல் கொள்ளை வருவாய். பாலையாகும் ஆறுகள்.

மணல் கொள்ளையை திமுகவுக்கு அறிமுகம் செய்தவர் ஜெயலலித்தா. கொடிகட்டி பறக்கிறது திமுக ஆட்சியில். கேரளத்தில் தடை செய்யப்பட்ட மணல் கொள்ளை இங்கு அரசாங்க அங்கிகாரத்துடன் மற்ற மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. சமுக சீரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலித்தா, மணல் கொள்ளைக்கு வித்திட்டவர் ஜெயலலித்தா. அதையே அரசியல் வருவாயின் இலக்காக செய்தவர் கலைஞர்.

அதன் வெளிப்பாடே இலவசத்திட்டங்கள்....

ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக்கி சட்ட மன்ற தேர்தலுக்கு முன்மொழிந்தாகிவிடட்து. ஜெயலலித்தா இப்போது எம்ஜிஆரை கூப்பிடுகிறார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பழக்கப்படுத்தியாகிவிட்டது. இதிலும் திமுகவே முன்னிலை. விழிக்கிறார் ஜெயா ?.

திராவிடக்கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன.

மாற்றான அரசியல் கட்சிகள் இல்லை.

காவடி தூக்கிகள் போட்டிப் போடுகிறார்கள்.

தேர்தலுக்கு பின்தான் தமிழகம் விழிக்குமா அல்லது மறிக்குமா ?

No comments:

Post a Comment