




கோக்,பீசா,எம்பிபிஎஸ்... எல்லாமே பணமிருந்தால் வசப்படும்!
எல்லாமே கிடைக்கும்
பணம்தான் முக்கியம்.
கோக் ,பீசா, எம்பிபிஎஸ்... மற்றும் எல்லா டிஜிட்டல் கனவுகள் மெய்ப்படும்.
பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
இளம் மனைவியை வாங்கலாம்.
கள்ளக்காதலை, காதலனை காதலியை போட்டுத்தல்லலாம்...
பணத்திற்காக இரத்த உறவுகளைக்கூட துச்சமாக பார்க்கச்சொல்லும் பணம்.
அமெரிக்கா கலாச்சாரம்.
பணத்திற்காக எல்லாமே கிடைக்கும். கனவு மெய்ப்படும்.
கோக் பீசா பெர்கர் கூட வீடுத்தேடிவரும். கிரிடெட் அட்டை. பேங்க் பேலன்ஸ் இருந்தால்.
படிப்புத்தேவை இல்லை எடிஎம்மில் நுழைய பணத்துடன் அட்டைப்போதும்.
கேப்பங்கஞ்சி கூழ் காணாமல் போய்விட்டது. குடிக்க தண்ணீர் கிடைக்காது கிராமங்களில். ஒரு ரூபாய் “தண்ணீர் பாக்கெட்”... எங்கும் கிடைக்கும்.
அக்குவாபீனா, கிங்லி பிராண்டுடன் மினரல் வாட்டர் தடை இல்லாமல் கிடைக்கும்.
வரண்டு போன நிலங்கள்....
மணல் கொள்ளையில் செத்துப்போன ஆறுகளில் தண்ணீர் திருடப்பட்டு பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
நவீன பொருளாதாரம்.
சிறப்புப்பொருளாதார மண்டலங்களாக ஆகிவிட்ட வயல் வெளிகள்.
சாம்சங்,மோட்டாரோலா, நோக்கியா, உண்டாய், போர்ட் எல்லா உலகின் முண்ணனி கம்பெனிகள் உங்கள் வயல் வெளிகளில்....
உலக சர்வதேச நாடுகள் பேசும் “உலக வெப்பமயமாதலை தடுக்க “
பண்ணாட்டு கம்பெனிகள் முளைத்ததால் எங்கள் நிலம் சாகும்.
பட்டிணிச்சாவுகள் தொடரும்..
மலிவாக வாழ்நாள் பேசும் சிம்கார்டுகள் கிடைக்கும்.
பட்டினியோடு செத்த முனியன் தகவல் சொல்ல கைப்பேசி..
இந்தியா விவசாய நாடு . அது காந்திகாலம்.
கலப்பு பொருளாதாரம் அதாவது அரசு பொருளாதாரமும் தனியார் முதலீடுக்கும் பிறந்த அவதாரத்தின் தோற்றமே.
உலகமயமாதலின் விளைவு.
கோக்கின் சுவை அமெரிக்கனுக்கு கிடைப்பது போல தெள்ளூரிலும் கிடைக்கும்.
குடிக்கத்தண்ணீர் கிடைக்காது.
பொருளாதார வல்லரசுப்பட்டியலில் இந்தியாவுக்கு 4 வது இடம்.
அறிவியலில் நுட்பத்தில் முன்னிலை..
வறுமைக்கோடுக்குக்கீழ் 40 சதவிகிதம் பேர்.
எழுத்தறிவு இல்லாதோர் 40 சதவிகிதம்...
விவசாயம் தொழில் சார்ந்தோர் 60 விழுக்காடு..
ஆனால் விவசாயத்தை நோக்கி திட்டங்கள் இல்லை.
பருப்பு, அரிசி இறக்குமதி செய்யலாம். அரசுத்தயார்...
வெங்காயமா இறக்குமதி செய்யலாம்.
உலக கம்பெனிகள் வேட்டையாடும் உழவு நிலத்தை...
நவீன பொருளாதாரம்.... இந்த முரண்களின் விளைவு
ஒருபக்கம் ஏழை பரதேசியாக.. ஒரு பக்கம் முதலீடுகளின் குவிப்பு.
அன்னிய மூலதனம் சுய பொருளாதார திட்டத்தை சாப்பிட்டுவிட்டது.
உலகமயத்தினால் முரண்பாடு அதிகரித்துவிட்ட்து.
ஐடி தொழிலில் 5 இலட்சம் சம்பாதிக்கும் மறுமாதம் நிரந்தரம் இல்லை.
மலிவு கூலி..
ஏலம் போடப்படும் மனிதம்.
எல்லாமே கிடைக்கும். மனிதத்தை தவிர.
No comments:
Post a Comment