திமுகவின் திசைத் திருப்பும் தீர்மானம்

அண்ணா நூற்றாண்டு நிறைவு மாநாடு 26.9.2009 நடைப்பெற்றது. இதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈழத்தமிழர்களை குறித்த தீர்மானம் அப்பிரச்சனையை நீர்த்துப்போக திட்டம் தீட்டுவதாக கருதவேண்டியுள்ளது.

ஒன்று கச்சைத்தீவை மீட்பது

மற்றொன்று தமிழகத்தில் 1984ல் இருந்து அகதிகளாக உள்ள ஒரு இலட்சம் தமிழர்களை இந்திய குடியுறிமைச் சட்டத்தின்படி அவர்களுக்கு உரிமையை பெற்றுத்தர மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற என்ன தேவை மற்றும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது?

இலங்கையில் 3 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக முகாமில் திறந்த வெளிச்சிறைச்சாலைப்போல் கால்நடைகளாக அடைக்கப்பட்டுள்ளார்களே அவர்களுக்கு இம்மாநாடு என்ன சொல்கிறது? இப்படியே இருக்க வேண்டியது தானா?

கலைஞர் சொல்வது போல இன்னும் வெளிநாட்டுப்பிரச்சனையாக எவ்வளவு நாட்களுக்கு பார்க்கப்போகிறோம்?

அடிப்படை வசதிகள் இல்லை. ஊட்டச்சத்து குறைபாட்டினால் தினம் தினம் குழந்தைகளும் பெண்களும் செத்துக் கொண்டு இருக்கிறார்களே ? இச்சூழல் சிங்கள பேரினவாத அரசால் செயற்கையாக உண்டாக்கப்பட்டுள்ளதே ? இதை யார் கேட்பது?

மய்ய அரசை நிர்பந்திக்க வேண்டிய திமுக அரசு இன்னும் நழுவல் முறையையே கைபிடிக்குமா?

இன்றும் தமிழக நாகை மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் தாக்கபட்டு உள்ளார்களே? இவர்கள் யார் வெளிநாட்டு தமிழர்களா?

இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களை அழிக்க காட்டிய வேகம், உதவி...

தமிழக தமிழர்களை கொல்லப்படும் போது, தாக்கபடும் போது பதறாதது ஏன்?

இதில் என்ன அழுத்தத்தை திமுக கொடுக்கப்போகிறது ?

எல்லாவற்றையும் இப்போது காஞ்சி திமுக தீர்மானம் நீர்த்துப்போக வைத்துவிட்டது?

பக்சேவுக்கு மட்டும் ஒன்று தெளிவாக தெரிந்து வைத்துள்ளார் தமிழக அரசியல் கட்சிகள் உணர்வால் ஒன்று சேரவே மாட்டார்கள் என்று.

இதைதான் இத்தீர்மானம் உறுதிபடுத்துகிறது.

செத்துக் கொண்டு இருப்பவனுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராக இல்லை. 1984ல் அகதியாக வந்தவர்களை இப்போது மிக அக்கரையாக கவலைப்படுகிறார்கள். சொல்லிவைத்தார்போல பிரச்சனையை நீர்த்துப்போகும் செயலைச் செய்ய திமுக இறங்கியுள்ளதே உண்மை.

No comments:

Post a Comment