கலாச்சார சீரழிவின் உச்சத்தில் கலைஞர் தொலைக்காட்சி.


இன்று (04.9.2009) மாலை பூவா தலையா என்ற பெண்களே கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. தொகுப்பாளர்களாக திரைப்பட நடிகைகள் ஸ்ரீபிரியாவும் குஷ்புவும் நிகழ்ச்சியினை வழிநடத்தினார்கள்.

மேற்கண்ட தொகுப்பாளர்கள் சமூக ஆய்வு வித்தகர்கள், ஆய்வாளர்கள்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு தெறிந்த அறிவு வித்தகர்கள், குஷ்பு மேம்,கலா மாஸ்டர்,நமிதா மேம் போன்றோர் பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர்களாக உள்ளனர்.

சமூக பிரச்சனைகளை அலசி ஆராயும் ‘மானாட மயிலாடநிகழ்ச்சி. இன்று சின்னத்திரையில் டாப் ரேங்கில் இது தான் உள்ளதாம். மழைப்பொழிவு, பனிப்பொழிவு இயற்கை சூழலை சின்னத்திரையில் கொண்டுவந்து புரட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். வழிக்காட்டி நிகழ்ச்சி அமைப்பாளர் கலாமாஸ்டர் மேம்.

சமூக சிந்தனைவாதி மச்சான் புகழ் நமிதா மேம், பெண்ணியத்துக்கு என்றுமே குரல் கொடுத்துவரும் குஷ்பு மேம், வாழ்கையில் போராடி முன்னுக்கு வந்துள்ள கலா மாஸ்டர் மேம் போன்றோர்தான் கலைஞர் தொலைக்காட்சியின் வழிக்காட்டிகள்.

அது என்ன மேம் ? தமிழை ஊடகத்தில் கவனமாக கையாள்கிறார்கள். வாழ்க கலைஞர்.

இப்போது பூவா தலையா? விவாத நிகழ்ச்சி.

தலைப்பு என்ன தெரியுமா ?

மக்களை பெரிதும் கவர்வது சின்னத்திரையா? பெரிய திரையா ? என்பதே.

தமிழகத்தில் உள்ள மின்சார பிரச்சனையை இவ்விவாதம் தீர்த்து வைக்கச் போகிறது. பன்றிகாய்ச்சலின் பீதியில் இருந்து அச்ச உணர்வை நீக்கப்போகிறது.

ஒருபக்கம் சன், விஜய், ஜெயா,ராஜ் கலாச்சார சீரழிவின் ஓட்டத்தில் முன்னிலை வகிப்பது கலைஞர் தொலைக்காட்சி.

பாவம் டாக்டர் அய்யா முழித்துக் கொண்டு இருக்கிறார் – மக்கள் தொலைக்காட்சியில் இந்த லிஸ்டில் இல்லையே என்று.

தமிழகத்தை கலாச்சார சீரழிவில் அதால பாதாளத்தில் தமிழுனர்வோடு தள்ளியதில் கலைஞர் தொலைக்காட்சி பெறும் பங்குண்டு என்பதை வரலாறு மறக்காது.

7 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நன்றாக சொன்னீர்கள் நண்பரே.
இதே 'மானாட மயிலாட ' நிகழ்ச்சியில் உலக மாகக் கலைஞன் மைகேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செய்கிறேன் பேர்வழி என்று கூறிவிட்டு, அவர்கள் செய்த அவமானத்தைக் கண்டு கண்கள் குளமானேன். என்ன சொல்வதுஎன்றே தெரியவில்லை. நீங்கள் யாரவது பார்த்தீர்களா?

sivaguru said...

amam intha KULLUKUU nadikainga than TAMIL la valarka pornaga . Aiyooo tamilan pavam !

Kalaachaaram said...

Pongadaa neengalum unga punaaku kalaacharaamum.

Anonymous said...

ayyo avan 'KIZHICHCHITTAAN'.

yetha ?

yepdi ?

answer please.

ஜொள்ளுத் ‘தமிழன்’ said...

இதைத்தான் இப்படிச் சொன்னார்கள்
“மானாட மார்பாட”

சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

Best Friend said...

indha vishayam yosikka vendiya vishyam, aanal nan onru solla virumbukiren , kalachara seerazhivu nam paarkum paarvayil dhan ulladhu adhu pondra nigazhchigalai ore oru'mani nera pozhudupokkaga paarthal onrum theriyadhu, adhai patri thirumba thirumba thirumba pesumbothu dhan adhil adhiga naattam varum unmayai sollaponal naangal andha nigazhchiyai paarthathai vida neengal dhan adhai adigam paarpeergal polirukku, adhanal dhan ennavo adhai patri thelivaga ezhudhi irukireergal,.... nan edhavadhu adhiga prasingi thanamaga pesiyirundhal adhai marandhu vidungal......

Anonymous said...

kaa காலம் மாறிவிட்ட நிலையில் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்ககூடாது

Post a Comment