அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
அன்னைத் தமிழீழ மண்ணே ! என் மண்ணே !
எங்கு வாழ்ந்தாலும் உலகினிலே நான்
ஏதிலி என்ற பெயர் தாங்குகிறேன்
எங்கு வாழ்ந்தாலும் உலகினிலே நான்
ஏதிலி என்ற பெயர் தாங்குகிறேன்
கண்கள் குளமாக ஏங்குகிறேன் நான்
கனவிலும் அழுது தூங்குகிறேன்
கனவிலும் அழுது தூங்குகிறேன்
அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
அன்னைத் தமிழீழ மண்ணே ! என் மண்ணே !
செக்கச் செவேலென்று செம்பருத்தி பூக்கள்
சிரித்திடும் என் வீட்டு முற்றமெங்கே !
செக்கச் செவேலென்று செம்பருத்தி பூக்கள்
சிரித்திடும் என் வீட்டு முற்றமெங்கே !
அக்கா தம்பி என்று முற்றத்திலே தாயும்
ஆடி மகிழ்ந்த என் முற்றமெங்கே !
தாயும் ஆடி மகிழ்ந்திட்ட முற்றமெங்கே !
அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
அன்னைத் தமிழீழ மண்ணே ! என் மண்ணே !
கோடி கோடி இங்கு குவிந்தாலும்
இந்தக் கோடி மாடி என் நாடாகுமா
கோடி கோடி இங்கு குவிந்தாலும்
இந்தக் கோடி மாடி என் நாடாகுமா
வாடி வறுமையில் நான் வாழ்ந்த நாளிலும்
அன்னை மண் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா
அன்னை மண் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா
அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
அன்னைத் தமிழீழ மண்ணே ! என் மண்ணே !
நேரில் நான் வரும் நாள் வரைக்கும் உன்
நினைவே உயிராக வாழ்வேனம்மா
நேரில் நான் வரும் நாள் வரைக்கும் உன்
நினைவே உயிராக வாழ்வேனம்மா
போரில் நீ வெல்லும் வரைக்கும் நான்
புலிகளுக்கே துணை போவேனம்மா
அன்னைத் தமிழீழ மண்ணே உன்னை
அள்ளி முத்தமிட ஓடி வருவேன்
உன் மடியில் வந்து நான் விழ வேண்டும்
என்னை மறந்து விம்மி விம்மி அழ வேண்டும்
No comments:
Post a Comment