நோய் பாதிப்பு
உலக முழுக்க 177457 பேருக்கு மேல் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1462 பேருக்கு மேல் இறந்து போய் உள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வளர்ந்த நாடு, ஏழை நாடு என்று வித்தியாசமே பார்ப்பதில்லை. பேருக்குத்தான் பன்றியை அடைமொழியாக வைத்து இருக்கிறோம். எச்1என்1 வைரஸ் பயனிப்பது என்னவோ காற்றில் தான்.
அவதாரம்
பறவைக்காய்ச்சல் ஒரு சுற்று அடித்து விட்டதைத் தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் புதிய அவதாரம் கொண்டு வந்துள்ளது. இவ்வைரஸ் எல்லாம் ஒரே பிரிவை சார்ந்தவர்கள் தாம். தன் ஜீன் அமைப்பை மாற்றி வலம் வருகிறார்கள். சிறிய மாற்றம் தான் பாதிப்போ அதிகம்.
ஆனால் இந்தியாவில் மட்டும் சாவு 17யை தாண்டிவிட்டது. இம்முறை இரண்டாவது சுற்றில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
மெக்சிகோ, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகள் பள்ளி/கல்வி நிறுவனங்களுக்கு ஒரு வார காலத்திற்கு விடுமுறை அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பரவும் விதமும் நமது கடமைகளும்.
இது கற்றின் மூலம் பரவும் நோய். “ஒட்டுவார் ஒட்டி” போல பெருட்கள் மூலம் ஒட்டிக்கொண்டு பரவவும் செய்கிறது.
உலக மக்கள் தொகையில் இரண்டாம் இட்த்தில் உள்ள இந்தியாவுக்கு இந்நோய் பெறும் சவாலே?!.
நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
1. மக்கட் தொகை அடர்த்தி
2. நெரிசல்
3. குறைந்த கல்வியறிவு விகிதம்
4. மருத்துவ வசதி பரவல் குறைபாடு
5. பொருளாதர வசதியின்மை
6. ஊட்டச்சத்து குறைபாடு – அடிக்கிக்கொண்டே போகலாம்.
ஆய்வகத்தில் மட்டும் கண்டறிய 24 மணிநேரமும், அதை உறுதிசெய்ய இன்னுமொரு 24 மணி நேரமுக் காத்த்கிருக்க வேண்டும். குறைந்த பட்ச செலவு 2000மும் அரசு செலவு செய்வதாக கூறுகிரார்கள். பெறும் கொள்ளை நோயாக உருவெடுத்தால் எப்படி எதிர் கொள்ளப்போகிறது. அரசாங்கம் ?
டேமி புளு மாத்திரைகள் மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே வைத்து கொடுக்கப் போகிரார்களாம்.
விடுதலை நாளை 64வது ஆண்டாக வெற்றிகரமாக கொண்டாடப்போகிரோம் ?
அனைவருக்கும் கல்வி என்பதையே இப்போதைய தலைமை அமைச்சர் உறுதி செய்யப்போவதாக கூறுகிரார். அனைவருக்கும் நல வாழ்வு சொல்லவே வேண்டாம்.
சரி. நம்மை எப்படி பாது காத்துக் கொள்வது ?
1. அடிப்படையில் சாதாரன புளு/ஜலதோசம் போல கானும் இந்நோய் காய்ச்சல்/வயிற்றுப்போக்குடன் தீவிரமைகிறது .
2. மேற் கொண்ட அறிகுறிகள் இருந்து கட்டுப்படாவிட்டால் மருத்துவரை அனுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. சுவாச அறிகுறிகளுடன் பிரச்சனைகள் காணப்பட்டால் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
4. நெறிசல் உள்ள பகுதிகளை கண்டிப்பாக தவிற்க வேண்டும்.
5. அதுவும் குறிப்பாக மையப்படுத்தப்பட்ட குளிர்விக்கப்பட்ட வசதிக் கொண்ட ( Centralized AC ) உள்ள இடங்களை தவிற்க வேண்டும். தொற்று ஏற்பட்ட காற்று உள்ளேயே சுற்றிக் கொண்டு இருக்கும் அதனால் தான்.
6. வெளிநாடுகள் / பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வரும் நபர்களுடன் பழகுவதை தவிற்க்க வேண்டும்.
7. தும்மல்/சளி/இருமல்/ போன்றவை வரும்போது கைகுட்டைவைத்து மூடிக்கொள்ள வேண்டும். ஒருவர் தும்மும் போது 60 கிலோமீட்டர் வேகத்தில் தும்முபவரின் உடலில் இருந்து காற்று வெளிப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
8. வெளியில் சென்று விட்டு வரும் போது கைகளை இரண்டு முறை சோப்புப்போட்டு நன்றாக கழுவ வேண்டும். இது துக்கடா செய்தியானாலும் பலனோ மலை போன்றது >
9. மெக்சிகோ நாட்டில் கிருத்துவ மத பாதிரியார்கள் மக்களை யாரும் சர்ச்சுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். மக்களும் வீட்டிலேயே கும்மிட பழகிக்கொண்டார்கள்.
10. இதையும் நாம் கணக்கில் இடுத்துக் கொள்ள வேண்டும்.
11. அதிகமான நீர், பழங்கள்,சத்துள்ள உணவு ? நல்ல பலனை கொடுக்கும்.
12. நோய் பாதித்து விட்டால் உடன் பொது சுகாதார துறைக்கு தெரிவிப்பது நல்லது.
1 comment:
Thanks.
Post a Comment