

உலக நாடுகளில் இருந்து இறக்குமதியான பன்றிகாய்ச்சல் தமிழகத்திலும் பீதியைக் கிளப்பியுள்ளது.
4வயது சிறுவன் இறப்பு
ஆம் . இந்நோய்க்கு 4வயது சிறுவன் பலியானதைத் தொடர்ந்து தமிழக அரசு உயர்மட்டக் குழுவைக் கூட்டி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்த்து.
மேலும் இறப்பா ?
இந்நிலையில் இன்று 11.8.2009 பிற்பகலில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பன்றிகாய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானதாக நகர்வு செய்திகளில் போட்டு காண்பித்துக் கொண்டே இருந்தார்கள். உடனே அப்பகுதி செய்தியாளர்களை தொடர்புகொண்டு கேட்டதற்கு இறந்த நபர் சுவாச மண்டல செயலிழப்பால் இறந்துள்ளதாக தெரிவித்தார். இச்செய்தி வந்தவாசி மற்றும் அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிற்சியை ஏற்படுத்திவிட்டது. பலர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டனர்.
2006ல் பொய்ச்செய்தி
இதேபோல 2006ல் சிக்குன்குனியா நோய் பெருந்தாக்கம் ஏற்படுத்திய போது இதே ஜெயா டிவி 100 பேருக்கு மேல் இறந்து போய்விட்டதாக செய்தியை பரப்பினார்கள். மருத்துவதுறை வல்லுநர்கள் சிக்குன்குனியாவால் இறப்பு நிகழாது என்று கூறியும் திரும்ப திரும்ப இச்செய்தியை ஒளிபரப்பியது.
ஊடக ஒழுக்கத்தை மறந்து வழக்கம் போல ஜெயா டிவி பச்சை அரசியலில் மீண்டும் ஈடுபடுகிறது. வரும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக திமுகவின் ஓட்டை குறைக்க இச்செயல் தந்திரத்தை கையாள்கிறது.
திமுக அதிமுக ஓட்டு அரசியலில் மக்களின் நலவாழ்வில் விளையாடுவது எவ்வகையில் நியாயம் ?
அரசியலில் மோதல் வேண்டாம் என்று சொல்ல வில்லை. மக்கள் நல்வாழ்வை சார்ந்த பணிகளில் இச்சீறழிவு போக்கை கையாளக்கூடாது. கடந்த ஆண்டு கூட போலியோ சொட்டு மருந்து போட்ட குழந்தை இறந்த்தாக சொன்ன செய்திகளால் பல இலட்சம் குழந்தைகள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளாமல் தவிர்த்து விட்டனர்.
இதில் ஜெயா டிவி என்னத்தை வாரிக்கொட்டிக் கொண்டது ?.
இப்போக்கு தொடர்ந்தால் தொலைக்கட்சி ஊடகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடுவார்கள் ?
1 comment:
When DMK people played the drama in RAT CURRY EATING in Tiruvarur areas, where had gone the MEDIA DISCIPLINE for SUN TV Group? As long as these two anti people parties are in forefront for political power this dirty games wont stop
Post a Comment