

தந்தை பெரியார் எனக்கு பிடிக்கும்...
எங்க தாத்தா பெரியாரின் கொள்கை பிடிப்பாளர்...
வீட்டில் பெரியாரின் படத்தை மாட்டி இருப்பது, நான் பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பவன், கடவுள் மறுப்புவாதி... என்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இதை செயலூக்கமுள்ள வழிக்காட்டியாக என்னுகிறவர்கள் வழக்கு மன்றத்தில் பெரியாரின் கருத்துகளுக்கு நான் தான் என்று உரிமை கோரி இருக்கமாட்டார்கள்...
ஆனால் சென்னை உயர் நீதிமன்றமோ சொன்ன தீர்ப்பில் ஒரு பகுதியில் “ புரட்சிகரக் கருத்துகள் அனைவரையும் சென்றடையவேண்டும் என்பதற்காக, “நூறு பூக்கள் மலரட்டும்; அதில் ஆயிரம் எண்ணங்கள் விரியட்டும்” என்று சீன தலைவர் மாவோ கூறினார். அதே போல் பெரியாரின் கருத்துகளும் பரவ வேண்டும். அவற்றுக்கு தடை விதிக்க முடியாது”
பெரியாரின் கொள்கைகளை, கருத்துக்களை ராயல்டி கோருவதும், காப்பி ரைட்ஸ் கோருவதும் பெரியாரை கொச்சப்படுத்துவதுவதற்கு ஒப்பானது.
பல தோழர்களின் வீடுகளில் வீட்டில் வீட்டில் உள்ளே பெரியாரின் படத்தை மாட்டி இருப்பார்கள். வீடுகளில் உள்ள பெண்களோ நல்ல நாளில் கடவுளர்களின் படங்களுக்கு பூவும் பொட்டும் வைத்து தொடர்ந்து பெரியாரின் பட்த்திற்கும் அதே சேவையை செய்து விடுவார்கள். விளைவு என்ன வென்றால் அவர் மட்டும் பெரியாரை பேசுவார்.வீட்டிற்கு வெளியே கொள்கையை பேசுவார். வீட்டை அவர் தான் சார்ந்த கருத்தியலுக்கு குடும்பத்தை பண்படுத்த மாட்டர். விளைவு பெரியாரையும் கடவுளர் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள். இப்போக்குதான் பெரியாரின் கருத்துக்களுக்கு பெரும் தடைகற்களாக உள்ளது.
கடவுளர்கள், பண்டிகைகள், கலாச்சார விழாக்கள் எல்லாமே சாதியை அடிப்படையாக்க் கொண்ட்து. சமூகத்தையும் அதன் கூறான குடும்பத்தையும் சாதியம் தான் கட்டிக்காக்கிறது. கடவுளை மீற சாதியத்தை உடை என்றார் பெரியார். ஆனால் சமூக போரில் நாம் துவக்க நிலையிலேயே உள்ளோம்.
நமக்குப் பெரியார் வழிக்காட்டியாக, சாதியத்தியத்தை உடைக்கும் கருவியாகவே பெரியார் வேண்டும். அவர் பூஜிக்கப்பட வேண்டியவராக... தனக்கு மட்டும் சொந்தம் என்று உரிமை கொண்டாடுபவராகும் போக்கும் பாரப்பனியத்தின் நீட்சியே.
நமக்கு வேண்டியது நான்கு சட்டங்களை அடைக்கும் பெரியார் அல்ல.
செயலூக்கமுள்ள வழிகாட்டியாக...
பார்ப்பனியத்தியதை எரிக்கும் தீச்சுடராக...
தீண்டாமையை உடைக்கும் சுத்தியலாக..
மொழி விடுதலையின் வேராக..
தமிழினவிடுதலையின் மூச்சாக..
பொதுமையின் அறிவாளாக, அறிவாக...
செய்யும் பெரியாரே இன்றயத்தேவை.
2 comments:
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
Tamil10.com
மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
நன்றி
ஈழவன்
Post a Comment