_-_Refugee_(500_x_375).jpg)


பன்னாட்டு ஒத்துழைப்போடு ஈழச் சமூகம் சிதைக்கப்பட்டு விட்ட்து.
ஈழமக்களின் பிரதிநிதிகளாக இருந்த புலிகள் அமைப்பு அழிதொழிக்கப்பட்டது
ஜனநாயகத்தின் வித்து விதைக்கப்பட்டதாக இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் அறிவித்தாயிற்று.
கம்பிவேலிகளுக்குப் பின்னால் சுமார் 3 இலட்சத்திற்கு மேல் தமீழீழ மக்கள் அகதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களில் வாரத்திற்கு சுமார் 1500 பேருக்கு மேல் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
பாகின்மூன்,மிலிபாண்ட்,ஹிலாரி போன்றோர் வழக்கம் போல கண்டிக்கிறார்கள்,செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்கள்.
கூடவே ஜனநாயகம் துளிர் விட்டிருப்பதாக வாய் கூசாமல் சொல்கிறாகள்.
பிறகு இலங்கை கட்டமைப்புக்காக பல கோடி டாலர்கள் வாரி வழங்குகிறார்கள். இலங்கை இராணுவத்தின் நிதியுதவியாக பல கோடி ரூபாய்களை பெற்று வந்து இருக்கிறார்கள் இராஜபக்சே சகோதர்ர்கள்.
ஒரு இனமோ சிறைக்கொட்டடியில்...
இளைஞர்கள், இளைஞிகள் வதை முகாம்களில் காணாமல் போகிறார்கள்.
உலகலாவிய பயங்கர வாதத்திற்கு பெறும் உதவி செய்திருப்பதாக பக்சே கும்பல்கள் பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறார்கள்.
சோனியா கும்பகள்களோ ஜனநாயகத்தின் ஒளிக் கீற்று பாய ஆரம்பித்துள்ளதாக உச்சுக் கொட்டுகிறார்கள்.
இந்து ராமோ ஈழத் தமிழர்கள் முன்பைவிட நல் வாழ்கை வாழ்வதாக சான்று அளிக்கிறார்.
பார்ப்பன பாசம், இந்து நேசம்,...
சுப்பிரமணிசாமியோ எல்லாம் முடிந்து விட்டதாக பார்ப்பனச் சிரிப்பு சிரிக்கிறார்.
ஆம்...
கொதிக்க வேண்டிய தொப்புள் கொடி உறவுகள் மனித பேரழிவு நடந்தபோது தேர்தல் திருவிழாவில் முகிழ்ந்திருந்தார்கள்...
தமிழர்களின் தலைவர்கள் வாரிசுகளுக்கு மகுடம் சூட்டுவதில் தீவிரம் காடிக்கொண்டு இருந்தார்கள்.
மீண்டுமொரு தேர்தல் வரப்போகிறது. ஆம் சட்ட மன்றத்தேர்தல் ஒரு ஆண்டில் வரப்போகிறது.
அப்போது ஈழப்படுகொலையை ஒரு வேளை நினைவுக்கூறப்படலாம்.
அவ்வப்போது சில கோடி ரூபாய்கள் உதவியாக வழங்கலாம்..
வாரத்திற்கு 1500 பேர் சாவு, பல நூறு பேர்களின் மனநிலை பாதிப்பு போன்ற நிகழ்வுகள் இராசபக்சேவின் ஜனநாயக காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது.
உலகெங்கும் சிதறியுள்ள 35 இலட்ச தமிழர்கள் இன அடையாளத்தை இழந்து கொண்டு வருகிறார்கள்.
சர்வதேச சமூகம் போல தொப்புள் கொடி உறவுகளான தமிழகத்தின் அமைதியில் ஈழத்தேசமக்கள் கம்பிவேளிக்குப்பின்னால் காணாமல் போகலாம்.
2 comments:
யாராவது எங்கள் இனத்தை காக்கமாட்டார்களாக என்றதே எங்கள் இன்றைய எதிர்பார்ப்பு.
சாந்தி
நடந்தது எல்லாம் எதிர்பாராமல் நடந்தது அல்ல
இனி நடக்க போவது எல்லாம் திட்டம் போட்டு நடத்தப்பட்டதே ஆகும்.
Post a Comment